ஆஸ்டின் வந்ததுக்கப்பறம் பதிவு போடவே முடியல. இடம் மாறி வந்து எல்லாம் ஒழுங்கான பிறகு computer ல வைரஸ் வந்து எல்லாம் மாத்த வேண்டியதா போச்சு. நம்ம பதிவு போடறது அதுக்கு கூட புடிக்கல போல.
இப்ப ஆஸ்டின்ல இருந்து முதல் பதிவா ஒரு accidental hit recipe. அத வெறும் சமையல் குறிப்பா எழுதறதவிட, நான் எப்படி பண்ணினேன்னு சொல்றேன்.
இரவு உணவுக்கு அவகாடோ சப்பாத்தி (அது அடுத்த பதிவு) , சென்னா மசாலான்னு முடிவு பண்ணி, காலையிலயே சென்னா ஊற வெச்சாச்சு. சாயங்காலம் பையனையும் பொண்ணையும் விளையாட கூட்டிட்டு போயிட்டதால அவசரமா சமைக்க வேண்டியதா போச்சு. அதனால எல்லாத்தையும் முன்னாலயே எடுத்து வைக்க முடியல.
சென்னாவை குக்கர்ல வச்சு 4 விசில் விட்டு எடுத்தேன். அடுத்து கடாஅயை அடுப்புல வச்சு, அது சூடாகறதுக்குள்ளே 1 வெங்காயம், 1 தக்காளி பொடியாக நறுக்கிட்டேன். கடாயில எண்ணெய் விட்டு சீரகம் தாளிச்சு விட்டு, வெங்காயம் வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கினப்புறம்தான் இஞ்சி, பூண்டு அரைக்கலயேன்னு நெனச்சேன். 4 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி எடுத்து துருவி அப்படியே கடாயில சேர்த்துட்டேன்.
அது வதங்கினப்பூறம் பார்த்தா தக்காளி கம்மியா இருக்கற மாதிரி தோணிச்சு. 1 1/2 டேபிள்ஸ்பூன் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கினேன்.
அதுல மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, வேகவைத்த சென்னாவையும் சேர்த்து திருப்பியும் குக்கர்ல வச்சாச்சு.
அப்பாடா ஒரு வேலை முடிஞ்சதுன்னு சப்பாத்தி போட ஆரம்பிச்சாச்சு. 2 விசில் வரைக்கும் விட்டு குக்கரை எடுத்து பார்த்தா, அது ஒரே தண்ணியா இருந்தது. அவசரத்துல தண்ணி கொஞ்சம் அதிகமா ஊத்திட்டேன் போல.
அடுத்ததா அதை சரி பண்ண, 4 பாதாம் 4 முந்திரி அரைச்சு சேத்து, நல்லா தண்ணி வத்தற வரைக்கும் விட்டேன். கடைசியா மல்லித்தளை கொஞ்சம் நறுக்கி சேர்த்தேன்.
இவ்வளவும் சொல்லிட்டு கோவிந்தோட கமெண்ட் சொல்லலன்ன்னா நல்லா இருக்காது. "எப்படி இன்னிக்கு இவ்வளவு சூப்பரா இருக்கு சென்னா மசாலா?".
உங்களுக்காகவே கஷ்டப்பட்டு செஞ்சேன்னு சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனாலும் உண்மைய சொல்லிட்டேன் (இல்லேனாலும் இந்த 8 வருசத்துல நம்மள பத்தி தெரியாதா அவருக்கு).
13 பேர் ருசி பாத்துட்டாங்க:
நல்ல ருசியான சென்னா மசாலா...
நன்றிங்க அண்ணாமலையான்
உங்க ப்ளாக் பக்கம் வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது.
ஆனாலும் சுவையும்,அழகும், நளினமும், வனப்பும்மாக படு பிரமாதம்.
நன்றிங்க மாணிக்கம்.
இண்டரஸ்ட்டிங்கா எழுதிருக்கிங்க சன்னா மசாலா ரெசிப்பிய!
நம்ம ஊர் ஆளுங்களை இணையத்தில பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.முன்பே ஒரு முறை உங்க ப்ளாக்-ல கமெண்ட் போட்டிருக்கேன்.
அழகா இருக்குங்க உங்க ப்ளாக்!
நன்றிங்க மகி. எந்த ஊரு நீங்க?
I am from Coimbatore Suganthi akkaa! Coimbatore means, within the city limits. :)
திவ்யா நானும் இது போல் அவசரடியில் பல பொருட்களை கலப்பதுண்டு.
இதுக்கு நீஙக் ஒன்றும் இல்லை வெரும் வெங்காயம் சோம்பு பச்ச மிளகாய் போட்டு வதக்கி பூண்டு சேர்த்து தக்காளி பேஸ்ட் மட்டும் சேர்த்த்தாலும் நல்ல இருக்கும். ஆனால் வெந்து வடித்து போட்டு இருந்தால் தண்ணீயாக ஆகி இருக்காது இல்லையா?
எது ஈசியா முடிக்கலாம் என்று நினைக்கிறோமோ அது ரொம்ப வேலை வாங்கும்.
வெகு நாட்கள் ஆச்சு உங்களை பார்த்து. மீண்டும் வந்ததில் ரொம்ப சந்தோஷம்.
மிக அருமை. சென்னாவும் சப்பாத்தியும் நல்ல காம்பினேஷன். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றிங்க ஜலீலா.
அப்படிதாங்க ஏதாவது அவசரத்துல பண்ணலாம்னு நெனைச்சு சொதப்பலா வந்ததுதான் நிறைய.
நன்றிங்க சுதாகர்.
sugathi,channa masala super,kalan briyani seaithu avarta orea paratu malai vagiten,thodarthu nearaya samayal saithu kattuga
nanum pakathulathan iruken north carolina la...
adutha pathivai eathir nakikondu irruken.
என்னது இது பத்து நாள் ஆச்சு, இன்னமும் பதிவைக் காணேம். இன்னும் சென்னா மசாலா ஜீரணம் ஆகலையா?
லக்ஷ்மி ப்ரியா நன்றிங்க.
சுதாகர், கொஞம் வேலை கூட இருக்குதுங்க. நாளைக்கு போட்டுறலாம்.
Post a Comment