அவகாடோ - 1
கோதுமை மாவு - 2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
- அவகாடோவை இரண்டாக வெட்டி அதன் சதைப்பகுதியை வழித்து எடுக்கவும்.
- உடனே அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து விடவும், இல்லன்னா கறுத்துரும்.
- கோதுமை மாவுடன் அவகாடோ, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து, சுடு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
- 2 அல்லது 3 மணி நேரம் கழித்து, சிறு, சிறு உருண்டைகளாக எடுத்து தேய்த்து, சப்பாத்தியாக போட்டு எடுக்கவும்.
இதில் எண்ணெய் சேர்க்க தேவையில்லை. அவகாடோவில் கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதால் சப்பாத்தி மிருதுவாக வரும். இதில் mono unsaturated fat அதிகம் இருப்பதால் உடம்புக்கும் நல்லது. L.D.L அளவைக் குறைக்க உதவும்.
19 பேர் ருசி பாத்துட்டாங்க:
வாவ்...சூப்பரா இருக்கு!
நான் இதுவரை அவகோடா வாங்கினதே இல்ல.
சப்பாத்தி டேஸ்ட்ல எதாவது வித்தியாசம் தெரியுமா சுகந்திக்கா?
டேஸ்ட் நல்லா இருக்கும். வித்தியாசமா தெரியாது. ரொம்ப சாஃப்டா வரும் மகி.
வாவ்...சூப்பரா இருக்கு! டேஸ்ட் நல்லா இருக்கும்.
Thanks prabha. It's good for health too.
உடம்பு இளைக்கனும்னு நினைக்கிறவங்க இந்த அவகடா ரொம்ப சாப்பிடக்கூடாதுன்னு நான் ஒரு இடத்துல படிச்சேன்.
மத்தபடி இந்த பழம் ரொம்ப நல்லது... :-)
சப்பாத்திய ஒரு பக்கம் முழுவதும் வேகவிட்டுட்டு மறுபக்கம் திருப்பி போடாம... ரெண்டு பக்கமும் உடனே உடனே மாத்தி மாத்தி போட்டு சுட்டா ரொம்ப மென்மையா இருக்கும். (மாவு பிணையிறதுக்கு வேற எதுவும் சேர்க்க வேண்டாம்... கொஞ்சமா சுடு தண்ணி சேர்த்து பிசைங்க போதும்)
வருகைக்கும், டிப்ஸ்க்கும் நன்றிங்க ரோஸ்விக்.
அம்மிணி,
சப்பாத்தி சூபரா இருக்குமாட்ட தெரியிதுங்க. ஆனா இந்த "அவகாடோ" அப்படீன்னா அது என்னங்க அம்மிணி?!
(உங்ககிட்ட மட்டும் ரகசியமா சொல்றனுங்க. நானு விவசாயப்படிப்புல, அதென்னமோ பிஎச்டின்னு சொல்றாங்களே, அது மட்டும் வரைக்கும்தானுங்க படிச்சிருக்கறனுங்க. வெளில யாரு கிட்டயும் சொல்லிப்புடாதீங்க! :)
ரோஸவிக் தம்பிக்கு இந்த அவகடோ சமாசாரம் தெரியுமாட்ட இருக்குதுங்க. தம்பி சிங்கப்பூர்ல இருக்குதில்லீங்க, அதனாலெ தெரிஞ்சிருக்கமாட்ட இருக்குதுங்க.
அம்மிணிக்கு பொள்ளாச்சிதான் சொந்த ஊருங்களா, இல்லெ பக்கத்துல ஏதாச்சும் ஊருங்களா? ஏன்னா நானு ஆனமலெலதான் மொதமொதல்லே வேலைக்குச்சேர்ந்தனுங்க. அதனாலெ அந்த ஊருங்களெல்லாம் கொஞ்சம் பளக்கமுங்க.
எப்போன்னு கேக்கறீங்களா, அது ஆச்சுங்க, ஒரு அம்பத்தஞ்சு வருசம்.
ரொம்ப ஓவரா பேசறனுங்களா, தாயி. நிறுத்திக்கறேனுங்க.
வாங்க கவுண்டரே! அவகாடோ நம்ம ஊர்ல பட்டர் ஃப்ரூட் னு நெனைக்கறேன். பெரிய படிப்பெல்லாம் படிச்சவுங்க போல :-).
நமக்கு பொள்ளாச்சி பக்கத்துல ஜமீன் முத்தூர்ங்க. பொறந்து வளந்ததெல்லாம் அங்கதாங்க.
நீங்க எந்த ஊருங்க?
சூப்பரான அவகோடா சப்பாத்தி.நானும் செய்திருக்கேன் சுகந்தி ரொம்ப சாப்டாயிருக்கும்...
பதில் போட்டதுக்கு தேங்க்ஸுங்க.
நமக்கு கோயமுத்தூரு பக்கத்துல வெள்ளக்கிணறு தாய் கிராமத்தை சேர்ந்த உருமாண்டான்பாளையம்-கிறது சொந்த ஊருங்க.
ஆனா நாம்பொறந்து வளந்ததெல்லாம் கோயமுத்தூருதானுங்க.இப்ப இருக்கெறது சாயிபாபா காலனிங்க.
அவகாடோ பளம் ஏற்காட்டில சாப்டிருக்கிறனுங்க. கோயமுத்தூர்லெ ரொம்ப பேருக்கு அது என்னன்னே தெரியாதுங்க. வெல ரொம்ப ஜாஸ்திங்க.
சப்பாத்தி நல்லா இருக்குங்க, புது வீடு,புதுஇடம் எல்லாம் எப்படி இருக்கு. படத்தில் சப்பாத்தி சாப்டா நல்லா இருக்கு. மிக்க நன்றி.
நம்ம கவுண்டரய்யா வந்துருக்காங்க, ரோஸ்விக்கு அண்ணாச்சி வந்துருக்காங்க, சூப்பரா பத்து சப்பாத்தி செய்து கொடும்மா மின்னல். ஹா ஹா நன்றி.
நன்றி மேனகா.
மறுபடி வந்து பதில் சொன்னதுக்கு நன்றிங்க கவுண்டரே.
நன்றிங்க சுதாகர். புது ஊர் நல்லா இருக்குதுங்க. எல்லாருக்கும் சேர்த்து ஒரு 50 சப்பாத்தி போதுமா?.:-)
சப்பாத்தி போட்டோவில் பார்த்தாலே சூப்பரா இருக்கு. அவகாடோ போட்டு ட்ரை பண்ணனும்.
நாங்க இருந்தது வெஸ்ட் Texas . இந்த நியூ இயர் ஆஸ்டின்ல கொண்டாடினோம். இப்போ kentucky வந்துட்டோம்.
Thanks anamika. I'll keep that in mind
நேத்து செய்தேன்ப்பா சூப்பரா இந்தது. நல்ல சாப்ட்டு. என் கணவர் நல்லா இருக்கு சொன்னாங்க. உங்கலால் எனக்கு பாராட்டும் கிடச்சது. ரொம்ப நன்றி தோழி.
நன்றி பிரபா. சமையல் ட்ரை பண்ணினதுக்கும், தோழின்னு சொன்னதுக்கும்.
pls collect ur award from my blog
http://sashiga.blogspot.com/2010/03/blog-post_27.html
யக்கா, இந்தப் பழத்தோட விதையை ஊணி வெச்சா அவகாடோ செடி முளைக்குமா? எப்படி விளைவிக்கிறாங்க இதை? தெரிஞ்சா சொல்லுங்களேன்!
தெரியலீங்களே சன்யாசி!! கூகுளைத்தான் கேக்கணும்.
Post a Comment