Thursday, March 18, 2010

சோள பணியாரம்

சோளத்தில் செய்யப்படும் நிறைய உணவு வகைகள் கொங்கு பகுதியில் உண்டு. அதில் இதுவும் ஒன்று.


தேவையானவை:

சோளம் - 2 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு

சின்ன வெங்காயம் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை :
  • சோளம், அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் இரவே ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து, உப்பு கலந்து வைக்கவும்.
  • 8 லிருந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை யை அரைத்து, புளித்த மாவுடன் கலந்து வைக்கவும்.
  • பணியார கல்லை வைத்து பணியாரங்களாக ஊற்றி எடுக்கவும்.

சூடாக தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

19 பேர் ருசி பாத்துட்டாங்க:

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பணியாரம்...நல்லா இருக்கின்றது...ஒரு முறை செய்து பார்க்கவேண்டியது தான்...நன்றி

தெய்வசுகந்தி said...

நன்றி கீதா. செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க

பழமைபேசி said...

ஆகா.... ஊருக்குப் போனாலுங்கூட, சோளத்தோசையும் சோளப் பணியாரமும் கிடைக்காதே? பேசாம, டெக்சாசு வர வேண்டியதுதான்!

//little town Pollachi //

உங்களுக்கு நெம்பப் பெரிய மனசுங்க.... நான் இன்னைக்குக் கூட பொள்ளாச்சியில இருந்து பதிவர்கள் நெம்பக் கம்மின்னு நினைச்சுட்டு இருந்தேன்....

நெம்பப் பேர் இருக்கீங்க.... :-o)

lakshmipriyarajagopal said...

சுகந்தி ரொம்ப நாலா ஆழ காணோம்,வேலைய ?பணியாரம் வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு .நன்றி

தெய்வசுகந்தி said...

வாங்க பழமைபேசி!!!!! பொள்ளாச்சி சின்ன ஊர்தானுங்க :-)

தெய்வசுகந்தி said...

நன்றி லக்ஷ்மி!! ஆமாங்க கொஞசம் புது ஊர்ங்கறதால வேலைதாங்க!!!!!

Chitra said...

சோளம் சேர்த்து -- வித்தியாசமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

Menaga Sathia said...

சோள்த்தில் பணியாரம் நன்றாக இருக்கு.இதுவரை செய்ததில்லை....

தெய்வசுகந்தி said...

நன்றி சித்ரா!!!
நன்றி மேனகா !! செஞ்சு பாருங்க நல்லா இருக்கும்.

மின்மினி RS said...

அருமையாக உள்ளது; எளிமையான செய்முறை, ஒரு தடவை செய்து பார்க்கணும்..

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி!!

Anonymous said...

wonderful paniyaaram.

தெய்வசுகந்தி said...

நன்றி மின்மினி!!!!
நன்றி அம்முமது!!!!!!!!!!!!1
நன்றி சங்கர்!!!!!!

Asiya Omar said...

புதுசாக இருக்கே.சூப்பர்.

மசக்கவுண்டன் said...

பழமைபேசி சொன்னது:

//ஆகா.... ஊருக்குப் போனாலுங்கூட, சோளத்தோசையும் சோளப் பணியாரமும் கிடைக்காதே? பேசாம, டெக்சாசு வர வேண்டியதுதான்!//

டிக்கட் வாங்கி அனுப்புங்க தம்பி, நானும் வர்றேன்.

சுகந்திம்மா, எங்கூட்டு அம்மாவும் பணியாரம் நல்லா சுடுவாங்க, ஆனா அமெரிக்கா சோளம்தான் வேண்டுமாம். வர்றப்போ ஒரு ரெண்டு வள்ளம் வாங்கிட்டு வாங்க.

தெய்வசுகந்தி said...

நன்றி ஆசியா!!!

தெய்வசுகந்தி said...

ஐயா நாங்க இந்தியாவுலருந்து வரும்போது வாங்கிட்டு வர்ரோம்ம். உங்களுக்கு இங்கிருந்து வாங்கிட்டு வந்தா போச்சு :-).
அப்படியே உங்கூட்டு அம்மாவை கேட்டு நம்மூரு பலகாரமெல்லாமும் போடுங்க.

Mahi said...

நானும் இதுவரை சோளம் சாப்பிட்டதில்லைங்க சுகந்திக்கா! எங்க அம்மா,அப்புச்சி வீட்டுல சோளச்சோற,சாமை சோறு,ராகிக் களி இதெல்லாம் செய்வேன்னு சொல்லிருக்காங்க. நீங்க சோளத்தை பிரபலப்படுத்திட்டீங்க,சூப்பர்!

தெய்வசுகந்தி said...

மகி டேஸ்ட்டும் நல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. நானும் சின்னதா இருகறப்போ வீட்ல இதெல்லாம் செஞ்சா புடிக்காது. இப்போ அதோட value தெரிஞ்சதுக்கப்பறம்தான் செய்யறேன்.

Related Posts with Thumbnails