Monday, December 14, 2009

பீர்க்கங்காய் பொரியல்

தேவையானவை


பீர்க்கங்காய் - 2
வெங்காயம் - 1/2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு

செய்முறை
  • பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கி வைத்த பீர்க்கங்காயை சேர்த்து வதக்கவும்.
  • உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
  • காய் வெந்ததும், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.



இந்த பொரியல் சாதத்துல பிசைஞ்சு சாப்பிடவும் நல்லா இருக்கும்.

12 பேர் ருசி பாத்துட்டாங்க:

அண்ணாமலையான் said...

உங்க குழந்தைங்க சூப்பரா இருக்காங்க. குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

வைரஸ் அட்டாக் சைட்னு வருது உங்களுது. தமிழிஷ் ஓட்டுப்பட்டைனாலன்னு நினைக்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

இம்ம் நல்லாயிருக்குங்க. எனக்கு தெரிந்து கூட்டுதான் செய்வார்கள். ஆனா இந்த பொரியலும் நல்லா இருக்கு. நன்றி.

அண்ணாமலையான் said...

படம் நல்லாருக்கு. சாப்டா நல்லாருக்குமா? சாப்டுட்டு சொல்றேன்.

Menaga Sathia said...

எனக்கு மிகவும் பிடித்த பொரியல்.நன்றாகயிருக்கு சுகந்தி!!

அண்ணாமலையான் said...

படம் பார்த்தே ருசிச்சாச்சு..

தெய்வசுகந்தி said...

நன்றிங்க அண்ணாமலையான். சாப்பிடவும் நல்லா இருக்கும்.

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா. எனக்கும், என் கணவருக்கும் பிடித்த பொரியல்

தெய்வசுகந்தி said...

நன்ற்ங்க சுதாகர்.

தெய்வசுகந்தி said...

ஆமாங்க சின்ன அம்மிணி. ஒரு வாரமா கூகுள் நம்மள block பண்ணியிருச்சு. எதனாலன்னு தெரியலங்க.

Jaleela Kamal said...

இதில் நாங்கள் கடலை பருப்பு சேர்த்து கூட்டு தான் வைப்போம், செய்து பாருஙக்ள். பொரியலும் சூப்பர்

தெய்வசுகந்தி said...

கூட்டும் நல்லா இருக்கும். நன்றிங்க ஜலீலா.

Related Posts with Thumbnails