கம்பில் செய்யப்படும் உணவு வகைகள் கொங்கு பகுதியில் நிறைய உண்டு. இந்த தோசையும் அதில் ஒன்று. எங்க வீட்ல நான் சின்னதா இருக்கும் போது அடிக்கடி செய்வாங்க. அப்பல்லாம் எனக்கு பிடிக்காது. இப்ப அம்மாகிட்ட கேட்டு ஒவ்வொண்ணா செஞ்சுட்டிருக்கிறேன்.
தேவையானவை
கம்பு - 2 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
உப்பு
செய்முறை
- கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- நன்கு ஊறியதும், அதை கழுவி கிரைண்டரில் அரைக்கவும்.
- பாதி அரையும் போது, அத்துடன், மிளகாய், வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து உப்பு கலந்து வைக்கவும்.
- நன்கு புளித்ததும், மெல்லிசான தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
14 பேர் ருசி பாத்துட்டாங்க:
சூப்பராயிருக்கு இந்த தோசை!!
ovvonnaaa try pannalaam.. :-s
நன்றி கலகலப்ரியா, மேனகா.
கம்பு மாவு வாங்கி வச்சுஇருக்கேன்..
கண்டிப்பாக உங்கள் செய்முறைபடி செய்து பார்க்க வேண்டியது தான்...
சூப்பரான சத்தான குறிப்பு.நன்றி
செஞ்சு சாப்டாச்சு..சூப்பர்..
நன்றிங்க கீதா. கம்பு மாவுல ஈசியா செய்யலாம். 4 கப் கம்பு மாவு + 1 கப் அரிசிமாவு + 1 கப் உளுந்துமாவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைத்து 8மணி நேரம் புளிக்க வைத்து தோசை ஊற்றினால் நன்றாக வரும்.
நன்றிங்க அம்மு மது
நன்றாக இருக்கிறது தெய்வசுகந்தி.
இப்பொளுதெல்லாம் இங்கு கம்புமாவு கிடைக்கிறதா தெரியவில்லை.
Super, very interestign dosa...helathy:)
ஆகா நம்ம ஊரு அயிட்டம் இது சூப்பருங்க. நான் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. நல்லா இருக்கு. நன்றி.
நன்றிங்க மாதேவி, மலர் காந்தி, சுதாகர்
இன்னைக்கு இந்த அயிட்டம்தான் பாத்துரலாம் நன்றிங்க
இன்னைக்கு இந்த அயிட்டம்தான் பாத்துரலாம் நன்றிங்க
அப்பத்தா அடிக்கடி செய்வாங்க இன்னைக்கு மனைவிக்கு பரிச்சை வைக்கபோறேன்
Post a Comment