பாஸ்மதி அரிசி - 3 கப்
காளான் - 2 கப்
(நம்ம ஊர்ல கிடைக்கிற சிப்பிக்காளான் மாதிரி இருக்கும்)
வெங்காயம் - 2 மெலிதாக நறுக்கியது
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லிதழை - சிறிது
புதினா - 1 கப்(நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 10 சிறிய துண்டுகள்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 4
பட்டை - 2 துண்டு
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 5
(சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.)
தாளிக்க
பிரியாணி இலை - சிறிது
மராட்டி மொக்கு
கடல்பாசி
ரோஜா மொக்கு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஜாதிக்காய் - சிறிது துறுவியது
ஏலக்காய் - 1
முந்திரி - சிறிது
செய்முறை
- அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
- குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்க்கவும்.
- அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு என்னெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
- காளானை சேர்த்து வதக்கவும்.
- ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதில் புதினா மற்றும் மல்லிதழை சேர்த்து கலக்கவும்.
- 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடிவைத்து விசில் போடவும்.
- 1 விசில் வந்ததும் சிறு தீயில் 5 நிமிடம் விட்டு இறக்கவும்.
தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம். எங்க வீட்ல அனைவருக்கும் பிடித்த உணவு இது. இதுல நீங்க காரம் இன்னும் கூட சேர்க்கலாம். கிராம்பு அரைக்க சேர்க்காம தாளிக்க சேர்க்கறதால அந்த காரம் குறையும். இது வெறும் oyster mushroom ல பண்ணினாலும் நல்லா இருக்கும்.
17 பேர் ருசி பாத்துட்டாங்க:
ரொம்ப சூப்பராயிருக்கு சுகந்தி.என் பேவரிட் கூட...
நன்றி மேனகா
எனக்கு மிகவும் பிடித்த பிரியாணி...சூப்பர்ப்...கலக்கலாக இருக்கு சுகந்தி...தட்டில் தயிர் பச்சடியுடன் பார்த்தவுடன் சாப்பிடவேண்டும் போல இருக்கே...
ரொம்ப நல்லாயிருக்குங்க. எனக்கு ஒரு சந்தோகம், கடல்பாசியும், காளானும் சைவமா? அசைவமா?. அது தாவர வகைகளா இல்லை விலங்கின வகையில் வருதா? நான் காளான் கூட சாப்பிடுவதில்லை. ஒரு முறை காளான் சூப் சாப்பிட்டேன் சுவை பிடிக்காததுனால சப்பிடுவதை நிறுத்திவிட்டேன். படங்கள் அனைத்தும் அருமை. அம்மினி.
நன்றி கீதா ஒரு பார்சல் அனுப்பிரலாமா :-)
நன்றிங்க சுதாகர். காளான் சைவம்தான் நல்லா தெரியும். அது விளைய வைக்கிறதுதான். கடல்பாசி தெரியலைங்க.நானும் அசைவம் சாப்பிட மாட்டேன். ஆனா குழந்தைகளுக்காக இப்ப சமைக்கிறேன். கடல்பாசி சைவமா அசைவமான்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா
ரொம்ப அருமையான காளான் பிரியாணி,
அரைத்து ஊற்றி செய்வதால் மணம் சூப்பராக இருக்கும்.
பித்தன் சார் கடல் பாசி சைவம் தான், கடல் பாசி குறிப்பு + படம் என் பிலாக்கில் இருக்கு பார்த்து கொள்ளுங்கள்.
பித்தன் உங்கள் பெயர் சுதாகரா. ஒகே இனி அப்படியெ கூப்பிடுவோம்.
நன்றிங்க ஜலீலா.
மேஜிக் மஷ்ரூம்னு ஒன்னு சொல்றாங்க அதுல பிரியாணி செய்யலாமா? மஷ்ரூம் ப்ரியாணி சாப்பிட்டதில்லை உங்க பதிவு சாப்பிட்டு பார்க்க சொல்லுது,பின் விளைவுகளுக்கு நீங்க தான் பொறுப்பு!
மேஜிக் மஷ்ரூம்னா என்னன்னு தெரியலீங்க. இந்த மஷ்ரூம்ல பண்ணற பிரியாணி நல்லா இருக்கும்.
என்னங்க சும்மா சமையல் பதிவு போட்டா எப்படி உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் .
படித்து விட்டு பதிவு எழுதவும். நன்றி அம்மினி.
வாங்க சுகந்தி என் பிலாக்கில் உங்கள் அவார்டை பெற்று கொள்ளுங்கள்
அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...
http://tamilparks.50webs.com
நன்றிங்க ஜலீலா
I'm planning to do this tommorow Suganthi,you have shown the quantity of everything in detailed,it makes much easy.
romba thanks suganthi....
nanga chennaila bachilor'a than irukkom .. naan samayal oandra naalla yeppavuma pudusu pudusa dish pannuven ...... but pasanga nalla illanu solli overa kalaaippanga.....
aana inniku kaalan biriyani senju koduthathula saaptuttu yellorume supernu soldranga..... romba romba thanks......
Post a Comment