செய்முறை
- 2 கப் கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
- அதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின் மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த கம்பை சேர்த்து கலக்கவும்.
- 5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விடவும்.
- நன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.
கம்மஞ்சோறு ரெடி.
கருவாட்டு குழம்போட நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு தெரியல. கத்தரிக்காய் குழம்பும் நல்லா இருக்கும்.
ஆனா எங்களுக்கு பிடித்தது கூழ்.
இந்த கம்மஞ்சோறு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்கறப்போவே உருண்டைகளாக உருட்டி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து கூழாக குடிக்கலாம்.
அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர் சாதமாகவும் சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.
ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால், அந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்.
அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து குடித்தால் நல்லா இருக்கும். புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.
வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும். (BTW எங்களுக்கு இப்பதான் வெய்யில் peakல இருக்குது).
கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி எடுப்பாங்க. இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி எடுக்கலாம்.
19 பேர் ருசி பாத்துட்டாங்க:
akka innaiuku than kammbu veetula irunthu eduthu vanthen but eppadi samaikarathu nu oru doubt .....ippo clear (bcoz we r bachelors)
கம்பஞ்சோறு + கருவாட்டு குழம்பு ...ஆஹா சூப்பர் காம்பினேஷன் .....படிக்கிறப்பவே ஜொள் வடிஞ்சி கீ போர்டை நனைக்கிறது..
பார்க்க நல்லா இருக்கே.... ம்ம்ம்ம்....
வெயிலுக்கேத்த ரெசிப்பி சுகந்திக்கா.நானும் கம்பங்கூழ் தான் குடிச்சிருக்கேன்..கம்மஞ்சோறு சாப்பிட்டதில்லை.
அருமையான ரெசிப்பி!
வெயிலுக்கு சரியான ஒன்று .,.
love the combo,really healthy recipe...
Deivasuganthi.. Kallakittinga..Itha naan kettirikken.. paathathilla.. You are able to do this recipe in Texas.. Kudos to you.. This is Aadi season here.. I am expecting Koozh next week in my mothers house.. Yes karuvaatu kuzhambu is a great combo to any koozh.. Thanks for the recipe.. Nice info!
வெய்லிக்கேத்த சூப்பர் ரெசிபி சுகந்தி....கம்மங்கூழ் தான் குடிச்சிருக்கேன்..உடனே செய்து சாப்பிடனும் போல் இருக்கு...
சூப்பர் சமையல்..
ஆஹா...அருமையான சத்தான உணவு....கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் தெய்வசுகந்தி...பகிர்வுக்கு நன்றி...
We all love this,WE like to have this with tomato kulambu Suganthi,nice post..
கம்பஞ்சோறு + கருவாட்டு குழம்பு//புடிக்கும் நான் சாப்பிட்டதே இல்லை...(:
ungalukku oru award koduthu irukiren . petruk kollavum
http://divyamma.blogspot.com/2010/08/blog-post_07.html
நன்றிங்க பெரியார்!!!
@ ஜெய்லானி , நன்றிங்க, எனக்கு கருவாட்டு குழம்பு பத்தி தெரியாதுங்க!!!
நன்றி சித்ரா!!
நன்றி மகி!!
நன்றி கார்த்திக்!!
நன்றி பிரேமலதா!!
நன்றி ஹேமா!!
நன்றி மேனகா!!
நன்றி அமைதிச்சாரல்!!!
நன்றி கீதா!!!
நன்றி அனு தக்காளி குழம்பும் நல்லா இருக்கும்!!!!
நன்றி செளந்தர்!!! ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க ஈசிதான்!!
நன்றி திவ்யாம்மா!!!
arumai.healthy food.
அருமை....அருமையாக சமைத்து பரிமாறி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து உங்கள் வீட்டு சமலறையில் நானும்.......சாப்பிட......நன்றிங்க.
நன்றி ஆசியா!!
முதல் வருகைக்கு நன்றி நித்திலம் !!!
நன்றி தெய்வசுகந்தி அம்மா . . .
Post a Comment