Monday, May 3, 2010

காய்கறி பக்கோடா

தேவையானவை
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பூண்டு - 3 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய்

காளிஃப்ளவர்
குட மிளகாய்
புரோக்கலி
வெங்காயம்
மல்லித்தளை
வெந்தயக்கீரை
செய்முறை
  • காய்களை உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • பூண்டு, சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
  • காய்களுடன் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் அரைத்து வைத்ததையும் சேர்த்து பிசறி வைக்கவும்.

  • எண்ணெயை காய வைத்து, சிறிது சிறிதாக போட்டு நன்கு வேக விட்டு எடுக்கவும்.

எல்லா காய்களும், கீரையும் சேர்க்கலாம்.

18 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

சூப்பரான க்ரிஸ்பி பகோடா , மாலை நேரத்துக்காண உணவு...

GEETHA ACHAL said...

சூப்பரான சத்தான காய்கறி பக்கோடா...குடைமிளாகயினை சேர்த்து செய்ததில்லை..அடுத்தமுறை செய்து பார்க்கிறேன்..நன்றி

Chitra said...

crunchy munchy snack..... mmmmm..... :-)

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா!!!
நன்றி கீதா!!!
நன்றி சித்ரா!!!

Anonymous said...

நான் எப்பயும் இதில் கீரையும் சேர்த்து தான் செய்வேன்.அருமையா இருக்கும்.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க மது!!! நானும் முடிஞ்ச வரைக்கும் எல்லாத்திலயும் கீரை சேத்துருவேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பக்கோடாவை சுறா படம் பாக்கும்போது சாப்பிடலாமா?

எல் கே said...

நல்லாத்தான் இருக்கு

Asiya Omar said...

வெஜ் பக்கோடா இதுவரை நான் செய்ததில்லை,சூப்பர்.காய்களை வேக வைத்து சேர்க்கலாம் தானே.

Mahi said...

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு..யம்ம்!!!

மின்னுது மின்னல் said...

செய்து பார்க்க நான் இருக்கேன்

சாப்பிட்டு பார்க்க ? ஒரு பலி ஆடு ரெடியா இருக்கு :)

Krishnaveni said...

First time here both the blogs(tamil and english) are really nice with interesting recipes. Pakoda looks crispy and delicious. Thanks for your comments in my blog

தெய்வசுகந்தி said...

@ ரமேஷ் ஏங்க இந்த கொலை வெறி !! பாவம் பக்கோடா பொழச்சு போகட்டும் விட்டுருங்க!!!! :-)

@ LK நன்றி!!!

@ஆசியா , காய்களை வேக வைக்க தேவையில்லை. அப்படியே சேர்க்கலாம்.

@ மகி ரொம்ப நாளா காணவே இல்ல. எங்க போயிட்டீங்க!!

@ மின்னல், அவ்வளவு மோசமா இருக்காதுங்க!!!:-)


@ Krishnaveni, நன்றிங்க!! அடிக்கடி வாங்க!!!

மசக்கவுண்டன் said...

படத்த பாத்தா நல்லாத்தான் இருக்கும் போல இருக்கு, எதுக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க, சாப்புட்டு பாத்துட்டு கருத்து சொல்றேன்.

தெய்வசுகந்தி said...

அனுப்பிட்டா போச்சுங்க!!!!!!!!!!

Jaleela Kamal said...

பார்க்கவே நல்ல மொரு மொருன்னு இருக்கு.

நானும் காய் களை நிறைய மிஞ்சி விட்டால் பிள்ளை, சாப்பிடாத காய்கலை இபப்டி பகோடா செய்துவிடுவேன்

தெய்வசுகந்தி said...

ஆமாங்க ஜலீலா!! பிள்ளைகளை சாப்பிட வைக்க இது ஒரு வழி!!!

Nithu Bala said...

pakoda sema crispy ya irukku..very tempting..

Related Posts with Thumbnails