Wednesday, July 15, 2009

முருங்கைக்காய் மசாலா


தேவையானவை

முருங்கைக்காய் - 4 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம் - 1/2 ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
உப்பு
எண்ணெய்





அரைக்க

சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
இஞ்சி - 10 சிறிய துண்டுகள்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை
மல்லி - 11/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்



செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு முருங்கைகாயை சேர்த்து வதக்கவும்.
  • அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • முருங்கைக்காய் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், தேங்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.
சாதத்துடன் சாப்பிடலாம்.

3 பேர் ருசி பாத்துட்டாங்க:

Unknown said...

Kongu Naattu Samayal Manamankuthunga. I was searching for authentic kongu recipes. Thanks for posting and expecting more and more.

Fasna (Udumalpet)
From Dubai

தெய்வசுகந்தி said...

நன்றி Fasna.

Asiya Omar said...

அருமையாக இருக்கு சுகந்தி.

Related Posts with Thumbnails