தேவையானவை
கத்தரிக்காய் - 15
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
புளிக்கரைசல் - 1 கப்
உப்பு
வதக்கி அரைக்க
வரமிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
- கத்தரிக்காயை காம்பை நறுக்காமல், அதன் அடி பாகத்தை நான்காக கீறி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை உடையாமல் வதக்கி எடுக்கவும்.
- அதே கடாயில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.
- இதில் கத்தரிக்காய்களை சேர்த்து புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
எங்கள் கொங்கு பகுதியில் உப்புப்பருப்பு, சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு combination மிகவும் பிரபலம்.
10 பேர் ருசி பாத்துட்டாங்க:
நான்தான் முதல் விருந்தாளியா?
எங்க வடாற்காடு மாவட்ட பக்கம், இந்த எண்ணெய் கத்தரிக்காய் பிரியாணிக்கு சூப்பர் காம்பினேஷன்.
இங்கு UK வில் எப்போவதுதான் நம்ம ஊர் போல, நல்ல க்வாலிட்டி நாட்டு கத்தரிக்காய் கிடைக்கும்.
பதிவிற்கு நன்றி.
நன்றிங்க தமிழ்நாட்டுத்தமிழன். பிரியாணிக்கு எண்ணெய் கத்தரிக்காய் காம்பினேஷன் இப்பதான் கேள்விப்படறேன்.
ammni kulambhu rombha nalaeruku
haa.
naan oru bachelor singapore karan.samayal eppadi seyyalm endru intha pakkam vanthen .try panni pathuttu solren. nanri!
நன்றிங்க palani.
சூப்பர் கிட்சன்
அந்த காரக் கத்திரிக்காய் அருமை.
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் மாதிரி உங்கள் பெண்ணுக்காக எழுதுவது எங்களுக்கும் உதவும்.
நன்றி
.
வாவ்.. படமும்..செய்முறையும் சூப்பர்.. கண்டிப்பா ட்ரை பண்றேன்..
எனக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு இது :-))
"எங்கள் கொங்கு பகுதியில் உப்புப்பருப்பு, சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு combination மிகவும் பிரபலம்." உண்மை. உப்பு பருப்பு, புளிக்குழம்பு/காரக்குழம்பு இல்லாத விருந்தா கொங்கு நாட்டில்.உங்கள் 'என் சமயலறையில்' இணைப்பை ஸ்வீடனில் உள்ள எனது மகனுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு.
nan palani mam it is very super thank to you mam and give moor to me in my mail.com rajasinghac883@gmail.com rajasingh_en@yahoo.co.in so meny thak to you good +you madam
madam it is super
Post a Comment