தேவையானவை
அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 5-6 ( பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துறுவியது) (optional)
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (optional)
உப்பு
கறிவேப்பிலை
கடுகு
சீரகம்
எண்ணெய்
செய்முறை
- அரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் கேரட் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு அரைத்த மாவை சேர்த்து, கையில் பிடிக்கும் பதம் வரும் வரையில் நன்கு கிளறவும்.
- மாவு நன்கு ஆறிய பிறகு, கொழுக்கட்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.
தேங்காய் சட்னி அல்லது ஊறுகாய் இதற்கு நல்ல மேட்ச்
9 பேர் ருசி பாத்துட்டாங்க:
பிள்ளையார் சதுர்த்திக்கு எனக்கு அந்த இனிப்பு கொழுக்கட்டை பிடிக்காது என்று என் பாட்டி எனக்கே எனக்காய் செய்து தந்த ஸ்பெஷல் காரகொழுக்கட்டை தின்ற நாட்கள் நினைக்கவைத்துவிட்டீர்கள்!
செம டேஸ்ட்டூ! நானெல்லாம் அப்படியே சாப்பிடுவேன் :)
வாங்க ஆயில்யன்,
நானும் எப்பவும் பிள்ளையார் சதுர்த்திக்கு சாமிக்கு படைக்கறதுக்கு அளவா இனிப்பு கொழுக்கட்டை செஞ்சுட்டு, சாப்பிட காரக்கொழுக்கட்டை செஞ்சுருவேன்.
அப்படியே சாப்பிடலாம் :)) (horlicks ad மாதிரி)
புதிதாக அறிந்து கொள்கின்றேன்...நன்றி
நன்றி தூயா. சுவையும் ரொம்ப நல்லா இருக்கும்.
hi suganthi
i have tried this with brown rice powder(puttu podi),it cameout well,easy & simple receipe,
thanks
laks
thanks laks it's healthy too(brown rice powder)
என்ன அரிசி?
புழுங்கல் அரிசி
சுகந்தி நாங்க இந்த கொழுகட்டைக்கு மாசி தொட்டு சாப்பிடுவோம் சுவை அபாரமா இருக்கும்.
Post a Comment