Thursday, June 25, 2009

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


தேவையானவை
கத்தரிக்காய் - 15
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
புளிக்கரைசல் - 1 கப்
உப்பு

வதக்கி அரைக்க
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
வரமிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
  • கத்தரிக்காயை காம்பை நறுக்காமல், அதன் அடி பாகத்தை நான்காக கீறி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
  • இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை உடையாமல் வதக்கி எடுக்கவும்.
  • அதே கடாயில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.
  • இதில் கத்தரிக்காய்களை சேர்த்து புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

எங்கள் கொங்கு பகுதியில் உப்புப்பருப்பு, சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு combination மிகவும் பிரபலம்.



Monday, June 22, 2009

மாங்காய் ஊறுகாய் (Mango Pickle)

கடையில் வாங்கும் ஊறுகாயின் வினிகர் வாசம் பிடிக்கத்தால், அம்மாவிடம் கேட்டு செய்தது இது.




தேவையானவை


மாங்காய் - 2 பெரியது
உப்பு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன் (வெந்தயத்தை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடிக்க வேண்டும்)
கடுகுத்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - சிறிது
நல்லெண்ணெய் - 2 கப்
கறிவேப்பிலை



செய்முறை


  • மாங்காயை கழுவி உலர்த்தி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • இதில் உப்பு கலந்து மூடி வைக்கவும். ( கண்ணாடி பாத்திரத்தில் வைத்தால் சீக்கிரம் கெடாது)
  • ஒவ்வொரு நாளும் கை படாமல் கலக்கி விடவும்.
  • 5 அல்லது 6 நாள் சென்ற பிறகு மிளகாய்த்தூளை ஊறிய மாங்காயுடன் கலக்கவும்.
  • கடாயில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் மாங்காயும் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.


2 வாரங்களுக்குப் பிறகு உபயோகிக்கலாம்.
6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்

Sunday, June 14, 2009

காளான் குழம்பு (Mushroom kuzhambu)





தேவையானவை




காளான் - 1/4 கிலோ


வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

கடுகு

உப்பு




வதக்கி அரைக்க


சின்ன வெங்காயம் - 20

வரமிளகாய் - 4

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 4 சிறிய துண்டுகள்

கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை




  • காளானை கழுவி நறுக்கி வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

  • பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

  • இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.

  • அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.

  • பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.


இது கொங்கு நாட்டு கோழி குழம்பு செய்முறை. நான் கோழிக்கு பதிலாக காளான் சேர்த்துள்ளேன்.

Related Posts with Thumbnails