உடைத்த கோதுமை(Cracked Wheet) - 1 கப்
பால் - 4 கப்
வெல்லம் - 2 கப்(6 அல்லது 7 அச்சு வெல்லம்)
முந்திரி & உலர்ந்த திராட்ஷை
நெய்
செய்முறை
- கோதுமையுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.
- அத்துடன் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 4 கப் பால் 2 கப்பாக குறையும் வரை சிறு தீயில் கொதிக்க விடவும்.
- கடாயில் நெய் விட்டு முந்திரி , உலர்ந்த திராட்ஷை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- கொதிக்கும் கோதுமையில் வெல்லம் மற்றும் வறுத்த முந்திரி,திராட்ஷை சேர்த்து இறக்கவும்.
இதை சூடாகவும் சாப்பிடலாம். அல்லது fridgeல் வைத்தும் சாப்பிடலாம்.
கோதுமை மற்றும் வெல்லம் சேர்ப்பதால் இதை டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம்.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
5 பேர் ருசி பாத்துட்டாங்க:
இது வரை இப்படி ஒரு பாயாசம் கேள்வி பட்டதே இல்ல...இண்டரஸ்டிங் ரெசிப்பீ..நேரம் கிடைக்கும் பொழுது என் தளத்திற்கும் வாங்க..
அன்புடன்,
அம்மு.
நன்றி அம்மு மது. இது எங்க அண்ணிகிட்ட இருந்து கத்துகிட்ட ரெசிப்பி.
Superaa pannreenga suganthi.I am going to try it tomorrow.
ரெண்டு ஏலக்காயைத் தட்டிப்போடுங்க.
பாயாச வாசனை வரும்.
கோதுமை ரவையைக் கொஞ்சம் நெய்விட்டு வறுத்துட்டு பாயசம் பண்ணுங்க. கொழகொழப்பு இல்லாம வரும்.
நாலுக் கப் பால்..... ரெண்டு கப் ஆகணுமுன்னா யார் அடுப்பாண்டை நிக்கறது அம்மாந்நேரம்?
எவாப்பரேட்டட் மில்க் ஒன்னு டின்னுலே கிடைக்கும். அதை வாங்கி ஊத்திச் சட்டுப்புட்டுன்னு வேலையை முடிச்சுக்கிட்டு அடுப்படியை விட்டு வெளியே வாங்கம்மா.
படிக்கவும் எழுதவும் நிறைய இருக்குல்லே:-))))
நன்றிங்க சாந்தி, துளசி கோபால். ஏலக்காய் போட மறந்துட்டேங்க.
டிப்ஸ்க்கு நன்றி
Post a Comment