Thursday, August 27, 2009

குடமிளகாய் ஸ்டிர் ஃப்ரை(Capsicam stir fry)

தேவையானவை:



குடமிளகாய் (பச்சை) - 1/2
குடமிளகாய்(ஆரஞ்சு) -1/2
இத்தாலியன் பெப்பர் - 1
வெங்காயம் - 1
(நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு



செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • நன்கு வதங்கியதும், அதில் நறுக்கி வைத்த மிளகாய்களையும், உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.

சப்பாத்தியில் ரோல் பண்ணி சாப்பிடலாம்.

அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.

7 பேர் ருசி பாத்துட்டாங்க:

Unknown said...

பார்க்கவே நல்ல கலர் புல்லா இருக்கு

தெய்வசுகந்தி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! .

Menaga Sathia said...

super dish!!

தெய்வசுகந்தி said...

நன்றிங்க மேனகாசத்யா!

GEETHA ACHAL said...

இதே போலவே தான் நானும் செய்வேன்..மிகவும் சுவையாக இருக்கும்..

இன்று மறுபடியும் இதே பெரியல் தான்...நன்றி

மாதேவி said...

குடமிளகாய் ஃப்ரை பார்க்கும்போதே சாப்பிட அழைக்கிறது.

தெய்வசுகந்தி said...

நன்றி கீதா ஆச்சல் , மாதேவி.

Related Posts with Thumbnails