இது காய் எதுவும் சேர்க்காமல் செய்யும் எளிமையான மோர்க்குழம்பு.
தேவையானவை
புளித்த மோர் - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- அத்துடன் புளித்த மோர் , உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதில் கலந்து வைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாதத்துடன் அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.
15 பேர் ருசி பாத்துட்டாங்க:
சிம்பிளா நல்லாயிருக்கு...
சின்ன வெங்காயம் போட்டு மோர் குழம்பு செய்வதை இப்பதான் கேள்வி படுறேன். இந்த முறையில் செய்து பார்கிறேன்.
நான்க்பா சுண்டைக்காய் போட்டுத்தான் பண்ணுவோம்
நன்றி மேனகா!
கெளசல்யா, நல்ல காரமா நல்லா இருக்கும். செஞ்சு பாருங்க!
மோர்க்குழம்புல சுண்டைக்காய், புதுசா இருக்குதுங்க கார்த்திக்!
மோர் குழம்பு சூப்பர்.வெங்காயம்,பூண்டு எல்லாம் சேர்த்து செய்திருக்கீங்க.
சூப்பர்ப்...நானும் இதே மாதிரி தான் செய்வோம்..ஆனா மஞ்சள் தூள் சேர்த்து கொள்வேன்...அடுத்த முறை சேர்க்காமல் செய்து பார்க்கிறேன்...
நன்றி ஆசியா!!
நன்றி கீதா!
வித்யாசமா இருக்கு சுகந்திக்கா! காரசாரமா இருக்கும்னு வேற சொல்லிட்டீங்க,சீக்கிரமா செய்துபார்க்கிறேன்.
சூப்பரா இருக்கு. செஞ்சு பார்க்கணும்.
நன்றி மகி!!
நன்றி வானதி!!
பூண்டு சேர்த்து செய்ததில்லை. புதிய டிப்.
looks very nice suganthi
மோர்க்குழம்புக்கு நான் தாங்க அகில
உலக ரசிகர் மன்றத் தலைவன். பத்து நிமிஷமா போடோவையே பாத்துகிட்டிருக்கேன்! வாழ்க... வாழ்க
நன்றி சித்ரா!!
நன்றி கிருஷ்ணவேணி!!!
நன்றி மோகன்ஜி!!!
உங்களுக்கு விருது கொடுத்து உள்ளேன்
http://rasikan-soundarapandian.blogspot.com/2010/11/blog-post_493.html
Post a Comment