என் பொண்ணுக்கு Schoolல 2 நாள் முன்னாடி பீட்ஸா craft பண்ணினாங்க. வீட்டுக்கு வந்ததும் இன்னிக்கு பீட்ஸா பண்ணனும், நாந்தான் ரோல் பண்ணி டாப்பிங் எல்லாம் போடுவேன்னு சொல்லிட்டா.
இது சுகந்தி & ஸ்ரீநிகா's Pizza.
தேவையானவை
பீட்ஸா பேஸ் செய்ய:
மைதா மாவு - 4 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
ட்ரை ஈஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
டாப்பிங்க்கு:
பீட்ஸா சாஸ்
மாஸரெல்லா சீஸ் - 1 பாக்கெட்
குடமிளகாய்
ஆலிவ்
ஹாலப்பினோ பெப்பர்
மஷ்ரூம்
வேற ஏதாவது காய் வேணும்னாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை
- வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, உப்பு , ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
- அதில் மைதா மாவு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். மாவு தளர்வாக இருக்க வேண்டும். 4 கப் மாவுக்கு 1 1/2 கப் தண்ணீர் சரியாக இருக்கும்.
- மாவு இருக்கும் பாத்திரத்தை clear wrap கொண்டு மூடி வைக்கவும்.
- 2 மணி நேரத்தில் மாவு இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.
- அதை மறுபடியும் நன்றாக பிசைந்து, இரண்டாகப்பிரிக்கவும்.
- ஒரு பகுதியை பிசைந்து சப்பாத்தி கட்டையில் பெரிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
- இது thin crust pizza. க்ரஸ்ட் திக்காக வேண்டுமென்றால் மாவும் திக்காக தேய்க்க வேண்டும்.
- பீட்ஸா பானில்(pan) தேய்த்த மாவை வைத்து ஒரங்களை கையால் அழுத்தி விடவும்..
- பீட்ஸா சாஸை தடவி அதன் மேல் வேண்டிய டாப்பிங்கை அடுக்கி, அதன்மேல் சீஸ் தூவி விடவும்.
- 400 டிகிரி ஃபாரஹீட்டில் முற்சூடு செய்த அவனில் 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்யவும்.
இந்த அளவுக்கு 2 பீட்ஸா செய்யலாம். ஒரு வெஜ்ஜி பீட்ஸாவும் 1 ஆலிவ் பீட்ஸாவும் செய்தோம்.
10 பேர் ருசி பாத்துட்டாங்க:
வாவ். பாக்கவே அருமையா இருக்கே . குட்டிச்கு என் வாழ்த்துக்கள்
ஸ்பெஷல் டெலிவரி உண்டாங்க? ஆர்டர் பண்றேனே!
நான் தானே முந்திரி?[First] சூப்பர் ரெசிபி முயற்சி செய்கிறேன்.....நன்றிங்க சுகந்தி.
super pizza!!
சூப்பர் பீட்ஸா. குட்டி யார்?
நன்றி கார்த்திக்!!!
சித்ரா, ஸ்பெஷல் டெலிவரி பண்ணிரலாமே:-)!!
நன்றி நித்திலம், நீங்க முந்திரி இல்ல
:(!!
நன்றி மேனகா!!
நன்றி வானதி!! குட்டி என் பொண்ணு ஸ்ரீநிகா.
ஸ்ரீநிகா,பேர் அழகா இருக்கு சுகந்திக்கா!
பீட்ஸா சூப்பர்! சாஸ் எந்த ப்ராண்ட் வாங்குவீங்க?
நன்றி மகி!! சாஸ் எனி ப்ராண்ட் வாங்குவேன். இது great value brand.
very very super thanks sivasubramaniamk0414@gmail.com
very very super thanks
Post a Comment