தேவையானவை
உருளைக்கிழங்கு - 2
வெண்டைக்காய் - 1/2 kg
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 சிறியது (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை
- உருளைகிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி பாதி வேக வைக்கவும்.
- வெண்டைக்காயை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, சிறுதீயில் வைத்து நன்கு வதக்கி எடுக்கவும்.
- அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- அதில் தக்காளி சேர்த்து வதக்கி, வெண்டைக்காயை சேர்த்து மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும்.
- கடைசியாக நிலக்கடலையை பொடித்து தூவி இறக்கவும்.
சப்பாத்தியுடன் சாப்பிட நல்லா இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். நிலக்கடலையை நன்றாக பொடிக்க கூடாது.
13 பேர் ருசி பாத்துட்டாங்க:
நல்லாயிருக்கும் போல. கண்டிப்பாக சமைத்துப் பார்க்கிறேன். நன்றிங்க.
புது கலவையா இருக்கு. நன்று.
இந்த நிலக்கடலையை பொடித்து தூவுவது புது டிப்ஸ்.அருமை முக்கோண சப்பாத்தி.
உங்க சமையல் எல்லாம் இன்று தான் ருசி பார்க்க முடிந்தது தோழி....லேட்டா சாப்பிட்டாலும் புல் கட் கட்டியாச்சு....! அல்வா சூப்பர்....!!
வேர்கடலை தூவி செய்து பார்த்ததில்லை... நல்ல டிப். நன்றி.
looks great suganthi
வெண்டைக்காய், உருளை சூப்பர் காம்பினேஷன்,, வேர்கடலை துவு சூப்பரா இருக்குமே.
புதுசாயிருக்கு சுகந்தி. பார்க்கும்பேதே சுவைக்கனும்போலிருக்கு..
http://niroodai.blogspot.com/
இது போன்று வட இந்தியாவில் அதிகம் செய்வர்.. சரியா ??
இந்த காம்பினேஷன் இதுவரைக்கும் ட்ரை பண்ணல சுகந்திக்கா! நல்லா இருக்கு.
போன போஸ்ட்ல எனக்கு அல்வா குடுத்துட்டீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) :)
நல்லா இருக்கு. இது மாதிரி நான் செய்ததில்லை அடுத்த தடவை இது போல் செய்து பார்க்கிறேன்.
காம்பினேஷன் புதுசா நல்லாயிருக்குப்பா...
Good twist with peanuts
http://shanthisthaligai.blogspot.com/
Post a Comment