Monday, January 17, 2011

மொச்சைக்கொட்டை கத்தரிக்காய் குழம்பு


பொங்கல் எங்க ஊர்லயெல்லாம் பட்டிப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) தான் (2வது நாள்தான்) விஷேசமா இருக்கும். தோட்டத்துல பட்டி கட்டி அதுல கல் கூட்டி அடுப்பு செஞ்சு விறகெல்லாம் எடுத்துட்டு வந்து வெக்கனும். அப்பறமா மாடெல்லாம் கழுவி விட்டு அலங்காரம் பண்ணனும்.
அப்பறமா பட்டியில மாட்டுச்சாணி கொண்டு வந்து அதுல தெப்பக்குளம் கட்டணும். அப்பறம் பொங்கல் வெக்கணும்.

சாப்பிட பருப்பு, மொச்சைக்கொட்டை கத்தரிக்காய் குழம்பு, தட்டைப்பயறு அரசாணிக்காய் குழம்பு, ரசம், அரசாணிக்
காய் பொரியல், அவரைக்காய் பொரியல், ரசம், வடை, பாயசம், தயிர் இதெல்லாம் செய்யணும்.

இப்ப மொச்சைக்கொட்டை குழம்பு எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையானவை

மொச்சை - 1 கப்
கத்தரிக்காய் - 6 ( நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளிக்கரைசல் - 1/2 கப்

வதக்கி அரைக்க

சின்ன வெங்காயம் - 15
வரமிளகாய் - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்


செய்முறை
  • மொச்சையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு அதைக்கழுவி குக்கரில் வைத்து 6 விசில் விட்டு வேக விடவும்.
  • வதக்கி அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி நன்கு அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, அதில் அரைத்த விழுதில் பாதியை சேர்த்து , புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • அதில் வேகவைத்த மொச்சை மற்றும் மீதி உள்ள அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
மொச்சை குழம்பு ரெடி.

கடைசியாக சிறிது வேகவைத்த மொச்சையை அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாக வரும்.
தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

20 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

எப்படி இருக்கிங்க?? உங்களை ரொம்ப நாளா காணாமே?? அரைத்து செய்வது ரொம்ப நல்லாயிருக்கும்,சூப்பர்!!

எல் கே said...

இந்த மொச்சைக்கொட்டை குழம்பை பொங்கல் அன்றே செய்வோம் நாங்கள்

vanathy said...

super recipe.

Chitra said...

It was my father's favorite veg. item. Brought back sweet memories.

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்கேன் மேனகா!.கொஞ்ச நாள் busy ஆ போயிருச்சு. நன்றி!

நன்றி கார்த்திக்! நாங்க 2 வது நாள்தான் செய்வோம்.

நன்றி வானதி!!

நன்றி சித்ரா!!

பொன் மாலை பொழுது said...

ரெசிபி நல்லாத்தான் இருக்கு.
ஆமா?? மட்டு பொங்கல் அன்று உங்க பக்கமெல்லாம் நான்-வெஜி தானே சிறப்பாக செய்வார்கள்??

அன்புடன் மலிக்கா said...

அரைத்து செய்வது ரொம்ப நல்லாயிருக்கும்,சூப்பர்

Kousalya Raj said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு டிஷ் இது...

//சிறிது வேகவைத்த மொச்சையை அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாக வரும்//

இது நல்லா இருக்கே...இந்த மாதிரி செய்தது இல்லை...இனி செய்து பார்க்கணும்.

லீவ் நிறைய எடுத்துடீங்க தோழி.

Kousalya Raj said...

நலம் தானே ??

இனி பதிவுகள் தொடரும் என்று எண்ணுகிறேன்...

தெய்வசுகந்தி said...

நன்றிங்க மாணிக்கம்!! மாட்டுப் பொங்கலன்னிக்கு எங்க பக்கம் நான்வெஜ் செய்ய மாட்டாங்க.

நன்றி மலிக்கா!!

நன்றி கௌசல்யா!! ஆமாங்க நிறைய நாள் லீவு எடுத்துட்டேன் . இனிமே தொடருவேன்.

Asiya Omar said...

சூப்பர் தெய்வசுகந்தி.இந்த குழம்பே மறந்து போச்சு,செய்து சாப்பிடனும் போல இருக்கு.

Mahi said...

குழம்பு சூப்பரா இருக்கு சுகந்திக்கா! லீவெல்லாம் முடிந்ததா? சீக்கிரமா பதிவுகள் போடுங்க.

Krishnaveni said...

wow, suganthi, patti pongal super, we also had the same in our native place, delicious kuzhambu, happy pongal and new year

GEETHA ACHAL said...

சூப்ப்ராக இருக்கின்றது..அம்மா செய்வாங்க...நான் சாப்பிட மட்டும் தான் செய்து இருக்கின்றேன்...இனிமேல் சமைக்க வேண்டியது தான்....

Jaleela Kamal said...

மொச்ச கொட்டை கத்த்திரிக்காய் மிக அருமை

Thenammai Lakshmanan said...

மொச்சையை வறுத்து ஊறவைக்கணுமா .. இல்ல சும்மாவேவா.. சுகந்தி

Jayanthy Kumaran said...

wow...mouthwatery kuzhambu...
Glad to follow u...:)
Keep visiting...!

Tasty appetite

NandhuSindhu said...

மிக நன்றாக இருந்தது;உங்களால் எனக்குப் பாராட்டும் கிடைத்தது;நன்றி
தி.இரத்தினவேலு

ப.கந்தசாமி said...

நான் பொள்ளாச்சியில் வேலை பார்த்தபோது பட்டிப்பொங்கலில் கலந்து கொண்டிருக்கிறேன். அது ஒரு நல்ல அனுபவம்.

Anisha Yunus said...

ஆஹா சுகந்திக்கா.... வீட்டுல அம்மா எனக்கு செஞ்சு தருவாங்க. மொச்சை எனக்கு பிடித்த பீன்ஸ். I miss You mochai!! :(

Related Posts with Thumbnails