இதுவும் கொங்கு ஸ்பெசல் இனிப்பு.
தேவையானவை
கடலைப்பருப்பு - 4 கப்
ஏலக்காய்த்தூள் - சிறிது
அச்சு வெல்லம் - 10 பெரியது.
மைதா மாவு - 2 1/2 கப்
சர்க்கரை - சிறிது.
நல்லெண்ணெய்.
செய்முறை
- மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.(4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்)
- கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும். குழையவிடக் கூடாது.
- தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும்.
- பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
- அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
- இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
- சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்.
- அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும்.
- பிறகு அதை ரொட்டி போல் தட்டவும்.(1/4 இன்ச் தடிமனுக்கு இருக்க வேண்டும்)
- நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.
- தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.
சுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.
நாலைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
15 பேர் ருசி பாத்துட்டாங்க:
வாழ்த்துகள் அம்மணி! எப்படியோ ஒப்பட்டுக்கு வீட்ல பிட்டைப் போட்டிரலாம்
ஒப்புட்டு பார்க்கவே சாப்பிடலாம் போல இருக்கு.:P
தீபாவளி வாழ்த்துக்கள் சுகந்திக்கா!
சூப்பராக இருக்கு..எப்படி இவ்வளவு பொருமையாக இவ்வளவு போளி சூட்டீங்களோ...உங்க வீட்டிக்கு வரவா...
Thank you for the sweet!
HAPPY DEEPAVALI!
நன்றிங்க இளா! நன்றி மகி! நன்றி கீதா! எப்போ வேணும்னாலும் வரலாம். நன்றி சித்ரா!!!
ஸ்வீட் சூப்பர். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழி. ஒப்பிட்டுக்கு நன்றி........
ஆஹா...சுகந்தி.., வாய் ஊறுது. எங்க வீட்டு பக்கம் நைட் ஆனா கார ஒப்புட்டும் இனிப்பு ஒப்புட்டும் சூடா ஒரு அண்ணன் கொண்டு வருவார், வாழை இலைல அதை வச்சு சூடா சாப்பிடறதே தனி சுகம்....ஹ்ம்ம்...இங இருந்துட்ட்டு கனவுதான் காண முடியும். எனக்கு இனிப்பை விட காரம் ரொம்ப பிடிக்கும், இருந்தாலும் அதுல ரெண்டு இதுல ரெண்டு சும்மா சக்கரை மாதிரி உள்ள போகுங்கம்மணி...ஏக்கமாத்தான் இருக்கு. என்ன செய்ய, நீங்க கூட பக்கத்துல இல்லியே?? :(
ஒப்புட்டு ஜோரா இருக்கு.
முடிந்தால் என்னுடைய இந்தப்பதிவைப் பார்க்கவும்.
http://masakavunden.blogspot.com/2010/11/blog-post_05.html
வணக்கம் மீனகம் வலைத்தள தரவரிசையில் உங்கள் வலைப்பூவினையும் பதிவு செய்யவும்.
http://meenakam.com/topsites/
ஒப்புட்டு (போளி)
எனக்கு மிகவும் பிடித்த, வித்தியாசமான ஒரு சாப்பாட்டு ஐட்டம் இந்த போளி...
கொஞ்சம் நிறைய நெய் விட்டா, 3-4 சாப்பிடலாம்...
சூப்பர் ரெஸிப்பி....
அடடாடடாஆ...அரும அரும எம்பட ஒப்புட்டு எங்கீங்...முஞ்சுப்போச்சுங்களா... மொத விருந்தாளி நாந்தானுங்..என்ற உரிமய ஆருக்கும் உட்டுக்கொடுக்க மட்டேனுங்...ரவிக்கே செஞ்சு அனுப்புங்கோய்......இல்லனா அடுத பிளைட்ட புடுச்சு வந்த்ருவேணுங்...
Good Sweet..
suganthikka,Check this link for a sweet award! :)
http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html
Opputtu nalla erukku....
Post a Comment