தேவையானவை
பச்சரிசி - 3 கப்
அச்சு வெல்லம் - 6 பெரியது
ஏலக்காய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
- அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.
- வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
- அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
- மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).
- வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.
- இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.
- மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
- 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
இதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.
16 பேர் ருசி பாத்துட்டாங்க:
அதிரசம் நல்லா இருக்கு. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தெய்வ சுகந்தி
அதிரசம் சூப்பர்.:P:P
enakku piditha sweet...thanks for the recipe
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். தீபாவளி வாழ்த்துக்கள்.
ஏங்க - இங்கே இந்தியன் கடையில் கிடைக்கும் அரிசி மாவில் அப்படியே செய்தால் நல்லா வருமா? படத்தை பார்த்ததும் உடனே சாப்பிடனும் போல இருக்குதே... :-)
இனிய தீபவாளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
சூப்பர்ர் அதிரசம்...கச்சாயம்ன்னு இதற்க்கு இன்னொரு பெயர் இருக்குன்னு இப்பதான் தெரியம்...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
அதிரசம் ரொம்ப நல்ல இருக்கு .
அதிரசம் செய்து பார்த்துவிட்டு மீதியை சொல்கிறேன் .
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றிங்க கார்த்திக்! நன்றி மகி!!! நன்றி நீது!! நன்றி புவனேஸ்வரி!!
சித்ரா, ஒரு முறை அரிசி மாவில் செஞ்சு நல்லாவே வரலைங்க. கொஞ்சம் வேலை அதிகம்னாலும் இது நல்லா இருந்தது.
நன்றி சங்கவி!! நன்றி மேனகா! நன்றி குறிஞ்சி! நன்றி ரோஷனி! செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க!
இதை நடுவில் ஓட்டை இன்றி செய்வார்கள் எனது நாட்டில் . அதை சீனி அரியதரம் என்றும் சீனைப் பணியாரம் என்றும் சொல்வார்கள்.
பகிர்வுக்கு நன்றி உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
அதிரசம் அருமை.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
thanks for the yummy looking adhirasams.
wish you happy diwali
nanum suvaith then
parattugal
polurdhayanithi
Post a Comment