Friday, August 20, 2010

பூண்டு குழம்பு

தேவையானவை:


வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1 1/2டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)

செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து , நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.

சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும். செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தூம் செய்யலாம்.

Wednesday, August 18, 2010

புரோட்டின் அடை

இங்கே பக்கத்துல இருக்கற farmers market ல 10 பீன்ஸ் சூப் மிக்ஸ் வெச்சுருந்தாங்க. இதுல பார்லி, பட்டாணி பருப்பு(பச்சை, மஞ்சள்), black beans, white beans, மசூர் பருப்பு, pinto beans, ராஜ்மா, red lentils எல்லாம் இருக்கு. அரிசி இல்லாம பார்லியோட நிறைய பருப்புங்கறதால சரி அடை செய்யலாமேன்னு முயற்சி பண்ணினேன். நல்லாவே வந்தது.

தேவையானவை:

10 பீன்ஸ் சூப் மிக்ஸ் - 2 கப்
வரமிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு

செய்முறை:

  • பீன்ஸ் மிக்ஸை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அரைக்கும் போது வர மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
  • பிறகு தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

தக்காளி சட்னி , கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். சட்னி இல்லாமல் சாப்பிடவும் நல்லா இருந்தது.

Monday, August 9, 2010

சந்தகை & தேங்காய்ப்பால்

சந்தகை கொங்கு பகுதியில் பிரபலமான உணவு. அதிலும் புதுசா கல்யாணமான பொண்ணு மாப்பிள்ளை விருந்துக்கு சந்தகைதான் செய்வாங்க.
சந்தகை செய்யறது ஒரு பெரிய வேலை!. முடிஞ்ச வரைக்கும் frozen வாங்கிருவேன். ஆனா எப்போவாவது வீட்லயே செய்யறதும் உண்டு.

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 4 கப்

செய்முறை

  • புழுங்கல் அரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து, கழுவி நைசாக அரைத்து எடுக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.(கொழுக்கட்டை பதம்).

  • வறுத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேக வைக்கவும். (அல்லது மாவை வறுக்காமல் இட்லியாக செய்தும் சந்தகை செய்யலாம்.)
  • கொழுக்கட்டை சூடாக இருக்கும் போதே

சந்தகை மரத்தில் வைத்து பிழிந்து எடுக்கவும்.(கொழுக்கட்டை சூடு ஆறிவிட்டால் பிழிய வராது)

இதில் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய்ப்பால் செய்ய:

தேவையானவை

தேங்காய்- 1

ஏலக்காய் - 4

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

  • தேங்காயை துருவி, ஏலக்காய் , தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் அரைத்து பிழிந்து பால் எடுக்கவும். (2 முறை செய்யலாம்.)
  • அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். நன்கு கலந்து விடவும்.
  • சர்க்கரை கரைந்து, லேசாக சூடு ஆகியதும் இறக்கி விடவும்.
  • கொதிக்க விடக்கூடாது.

தக்காளி சந்தகை, புளி சந்தகை அல்லது தயிர் சந்தகையும் செய்து சாப்பிடலாம்.

Related Posts with Thumbnails