
தேவையானவை:
நிலக்கடலை - 2 கப்
வெல்லம் - 3/4 கப் (துருவியது)
நெய் - சிறிது
செய்முறை
- நிலக்கடலையை நன்றாக வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
- அதில் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு 4 அல்லது 5 முறை pulse பண்ணவும்.(நான் முழுசா தோல் நீக்க மாட்டேன், பாதி தோல் இருக்கற மாதிரி செய்வேன்)
- ஒரளவு பறு பறுப்பாக இருக்க வேண்டும்.
- அத்துடன் வெல்லத்துருவலை சேர்த்து மறுபடியும் ஒரு முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
- இதை சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
சத்தான கடலை உருண்டை ரெடி. என் கணவருக்கும், பொண்ணுக்கும் ரொம்ப பிடித்தது இது.
அதிகமாக நெய் சேர்க்கவேண்டியதில்லை. உருண்டை பிடிக்கும் போது கைகளில் தடவிக்கொண்டால் போதும்.
இனிப்பு தேவைக்கு ஏற்ப வெல்ல அளவை சரி செய்து கொள்ளலாம்.
கடலை வறுக்க(நிஜமாவே நிலக்கடலைதாங்க, வேற எதுவும் இல்ல) சுலபமான முறை அவனில் வைத்து எடுக்கலாம்
300F ல் 10 - 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும்.
சீக்கிரமா செய்ய வேண்டுமானால் microwave லும் செய்யலாம். microwave ல் 2 நிமிடம் வைத்து 3 நிமிடம் standing time கொடுத்து எடுத்தாலும் நன்றாக இருக்கும்.