Monday, December 14, 2009

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை

பீர்க்கங்காய்தோல்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 1 பல்
தேங்காய் - 1 1/2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
புளி - சிறிது
உப்பு

செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கி எடுக்கவும்.
  • வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.
  • பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கி எடுக்கவும்.
  • கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மல்லிவிதை, சீரகம் சேர்த்து வறுத்து, அதில் தேங்காய் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
  • அனைத்தையும் சேர்த்து அத்துடன் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.

பீர்க்கங்காய் பொரியல்

தேவையானவை


பீர்க்கங்காய் - 2
வெங்காயம் - 1/2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு

செய்முறை
  • பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கி வைத்த பீர்க்கங்காயை சேர்த்து வதக்கவும்.
  • உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
  • காய் வெந்ததும், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.



இந்த பொரியல் சாதத்துல பிசைஞ்சு சாப்பிடவும் நல்லா இருக்கும்.

Wednesday, November 25, 2009

ரசம் (புளி சேர்க்காத ரசம்)

இந்த ரசத்தை எங்க வீட்ல செலவு ரசம்னு சொல்லுவாங்க. புளி சேர்க்காம செய்யற ரசம். சளி பிடிச்சிருந்தா எங்க அம்மா இந்த ரசம் வெச்சு குடிக்க சொல்லுவாங்க. எனக்கு பிடித்த ரசம் இது.



தேவையானவை



வெங்காயம் - சிறிது பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு
சீரகம்
உப்பு
எண்ணெய்



வதக்கி அரைக்க



சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
வர மிளகாய் - 1
கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

  • அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

இது சூப் மாதிரி குடிக்கவும் நல்லா இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம்.

இத்துடன் தூதுவளை இலை 4 அல்லது 5 சேர்த்து வதக்கி அரைத்து செய்யலாம்.

தூதுவளைப்பொடி 1 டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம்.

அரைக்கும் போது கொள்ளு 1 டீஸ்பூன் சேர்த்து அரைத்தும் செய்யலாம்.

Monday, November 23, 2009

கீரை(Spinach) கடைசல்

தேவையானவை

ஸ்பினாச் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1/4 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 2 பல் நறுக்கியது
எண்ணெய்
உப்பு


செய்முறை
  • கீரையை கழுவி சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு வேக வைக்கவும். (தண்ணீர் மிகவும் குறைவாக வைக்கவும்.)
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • கீரையையும், வதக்கியவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (2 அல்லது 3 சுத்து விட்டால் போதும். ரொம்ப அரைக்க வேண்டாம்).

சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லா இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க சிறிது வெண்ணெய் சேர்த்து அரைத்து கொடுக்கலாம். என் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் மிகவும் பிடித்தமானது இது. செய்வதற்கும் சுலபமானது.

Saturday, November 14, 2009

கம்பு தோசை

கம்பில் செய்யப்படும் உணவு வகைகள் கொங்கு பகுதியில் நிறைய உண்டு. இந்த தோசையும் அதில் ஒன்று. எங்க வீட்ல நான் சின்னதா இருக்கும் போது அடிக்கடி செய்வாங்க. அப்பல்லாம் எனக்கு பிடிக்காது. இப்ப அம்மாகிட்ட கேட்டு ஒவ்வொண்ணா செஞ்சுட்டிருக்கிறேன்.



தேவையானவை


கம்பு - 2 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
உப்பு

செய்முறை

  • கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • நன்கு ஊறியதும், அதை கழுவி கிரைண்டரில் அரைக்கவும்.
  • பாதி அரையும் போது, அத்துடன், மிளகாய், வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து உப்பு கலந்து வைக்கவும்.
  • நன்கு புளித்ததும், மெல்லிசான தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம். தக்காளிச்சட்னி அல்லது தேங்காய் சட்னியுடனும் நல்லா இருக்கும்.

Related Posts with Thumbnails