அவகாடோ டிப் (Guacamole)
தேவையானவை:
அவகாடோ - 2
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (விதை நீக்கி பொடியாக நறுக்கியது)
மல்லித்தளை - சிறிது (பொடியாக நறுக்கியது)
ஹாலப்பினோ மிளகாய் - 1 (விதை நீக்கி பொடியாக நறுக்கியது)
உப்பு
மிளகுத்தூள்
எலுமிச்சைசாறு - சிறிது
செய்முறை:
- அவகாடோவை நறுக்கி கொட்டை நீக்கி, அதன் சதைப்பகுதியை வழித்தெடுத்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு ஃபோர்க் கொண்டு மசிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், மிளகாய், மல்லித்தளை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து நன்றாக மூடி ஃப்ரிஜ்ல் வைக்கவும்
- பரிமாறும் போது தக்காளியை கலந்து பரிமாறவும்.

உங்களுக்கு பிடித்த சிப்ஸ் உடன் சாப்பிடலாம்.
guacamole sandwich
தேவையானவை:
ரொட்டித்துண்டுகள்
அவகாடோ டிப்
ஹம்மஸ் (இது கொண்டைக்கடலையில் செய்தது. எல்லா கடையிலும் கிடைக்கும். நிறைய veriety கிடைக்கும். நான் உபயோகித்தது Garden vegetable hommus)
செய்முறை:
- ஒரு ரொட்டியின் ஒரு புறம் அவகாடோ டிப்பை தடவவும்.
- இன்னொரு ரொட்டியின் ஒரு புறம் ஹம்மஸ்ஸை தடவவும்.
- இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

இதில் வேண்டிய காய்களை வெட்டி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கி, அதையும் வைத்து சாப்பிடலாம்.
சமைக்க நேரம்/விருப்பம் இல்லாத நாள்களில் sandwich+ fruits ஒரு நல்ல dinner. நேற்று இரவு சமைக்க விருப்பம் இல்லாததால் இதுவும் fruit salad ம் சாப்பிட்டோம்.