தேவையானவை
சாதம் உதிரியாக - 2 கப்
பச்சை கத்தரிக்காய் - 3 (நறுக்கியது)
கடுகு - சிறிது
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
எண்ணெய் - தேவைக்கு
அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லித்தளை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 7 அல்லது 8
புளி - சிறிது
செய்முறை
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து வைக்கவும்.
அப்பளம் அல்லது வடகம் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த நீளக்கத்தரிக்காய் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.(படம் google உதவி)