Friday, July 30, 2010

கம்மஞ்சோறு & கம்மங்கூழ்

தேவையானவை
கம்பு - 2 கப்


செய்முறை
  • 2 கப் கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
  • அதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின் மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த கம்பை சேர்த்து கலக்கவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விடவும்.
  • நன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.

கம்மஞ்சோறு ரெடி.
கருவாட்டு குழம்போட நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு தெரியல. கத்தரிக்காய் குழம்பும் நல்லா இருக்கும்.
ஆனா எங்களுக்கு பிடித்தது கூழ்.


இந்த கம்மஞ்சோறு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்கறப்போவே உருண்டைகளாக உருட்டி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து கூழாக குடிக்கலாம்.
அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர் சாதமாகவும் சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.
ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால், அந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்.


அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து குடித்தால் நல்லா இருக்கும். புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.
வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும். (BTW எங்களுக்கு இப்பதான் வெய்யில் peakல இருக்குது).
கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி எடுப்பாங்க. இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி எடுக்கலாம்.

Wednesday, July 14, 2010

மாம்பழ ஸ்மூத்தி

தேவையானவை


மாம்பழம் - 2
பால் - 1 கப்
வென்னிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
  • மாம்பழத்தை தோல் சீவி நறுக்கவும்.
  • அனைத்தையும் ப்ளெண்டரில் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
மாம்பழக்கூழும் சேர்த்து செய்யலாம்.

Tuesday, July 6, 2010

தக்காளி சாதம்

தேவையானவை

சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 (நீள வாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 10 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தளை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு

அரைக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு -1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
செய்முறை

  • சாதத்தை உதிரியாக செய்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி , அரைத்தவற்றையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • மல்லித்தளை, புதினா சேர்த்து கலக்கவும்.
  • இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.

இந்த மசாலாவை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடவும் உபயோகிக்கலாம்.

Related Posts with Thumbnails