தேவையானவை
கொள்ளு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
மல்லித்தளை
பூண்டு - 3 பல் (நன்றாக தட்டி வைக்கவும்)(crushed)
கடுகு
பொடிக்க
சீரகம் - 1டேபிள்ஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 4
(நன்கு பொடிக்கவும்) அம்மியில் பொடித்தால் நல்லா இருக்கும். நான் சின்ன கல்லில் பொடிப்பேன். மிக்ஸியும் உபயோகிக்கலாம்.
செய்முறை
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- பிறகு கொள்ளு வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- கடைசியாக மல்லித்தளை சேர்க்கவும்.

இதை சூப் போல அப்படியே குடிக்கலாம். சாதத்துடன் சாப்பிடலாம்.
தட்டைபயறு, பாசிப்பயறு வேக வைத்த தண்ணீரிலும் இதே போல் ரசம் செய்யலாம்.