இந்த ரசத்தை எங்க வீட்ல செலவு ரசம்னு சொல்லுவாங்க. புளி சேர்க்காம செய்யற ரசம். சளி பிடிச்சிருந்தா எங்க அம்மா இந்த ரசம் வெச்சு குடிக்க சொல்லுவாங்க. எனக்கு பிடித்த ரசம் இது.
தேவையானவை
வெங்காயம் - சிறிது பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு
சீரகம்
உப்பு
எண்ணெய்
வதக்கி அரைக்க
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
வர மிளகாய் - 1
கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
- அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
இது சூப் மாதிரி குடிக்கவும் நல்லா இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம்.
இத்துடன் தூதுவளை இலை 4 அல்லது 5 சேர்த்து வதக்கி அரைத்து செய்யலாம்.
தூதுவளைப்பொடி 1 டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம்.
அரைக்கும் போது கொள்ளு 1 டீஸ்பூன் சேர்த்து அரைத்தும் செய்யலாம்.