Wednesday, July 15, 2009

முருங்கைக்காய் மசாலா


தேவையானவை

முருங்கைக்காய் - 4 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம் - 1/2 ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
உப்பு
எண்ணெய்





அரைக்க

சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
இஞ்சி - 10 சிறிய துண்டுகள்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை
மல்லி - 11/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்



செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு முருங்கைகாயை சேர்த்து வதக்கவும்.
  • அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • முருங்கைக்காய் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், தேங்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.
சாதத்துடன் சாப்பிடலாம்.

Monday, July 6, 2009

சுரைக்காய் கடைசல்

தேவையானவை


சுரைக்காய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிது
உப்பு
எண்ணெய்
பெருங்காயத்தூள் - சிறிது


செய்முறை

  • குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அத்துடன் சுரைக்காய், தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்
  • அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, புளி கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு 2 விசில் வரும்வரை விட்டு எடுக்கவும்.
  • ஆறியதும் பருப்பு மத்து வைத்து நன்கு கடைந்து விட்டு மல்லித்தளை தூவி வைக்கவும்.

இது உப்புமா மற்றும் வெண்பொங்கலுக்கு நல்ல combination. இட்லி, தோசைக்கும் நல்லா இருக்கும்.

Related Posts with Thumbnails