கத்தரிக்காய் - 15
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
புளிக்கரைசல் - 1 கப்
உப்பு
வதக்கி அரைக்க
வரமிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
- கத்தரிக்காயை காம்பை நறுக்காமல், அதன் அடி பாகத்தை நான்காக கீறி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை உடையாமல் வதக்கி எடுக்கவும்.
- அதே கடாயில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.
- இதில் கத்தரிக்காய்களை சேர்த்து புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
எங்கள் கொங்கு பகுதியில் உப்புப்பருப்பு, சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு combination மிகவும் பிரபலம்.