Monday, March 23, 2009

காய்கறி கொத்து பரோட்டா

தேவையானவை


frozen பரோட்டா - 6
காய்கறி - 11/2 கப் (கேரட், பீன்ஸ்,பட்டாணி)
சோயா உருண்டைகள் - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
முட்டை - 2 (optional)
சோயா உருண்டைகள் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் -1
கடுகு
பட்டை - 3 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
உப்பு
எண்ணெய்




செய்முறை

  • பரோட்டாவை சூடு பண்ணி சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் சூடு பண்ணி கடுகு, பிரியாணி இலை, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து சிறிது வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  • அத்துடன் காய்கள் மற்றும் சோயா உருண்டைகள் சேர்த்து சிறு தீயில் வேக விடவும்.
  • அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும்.
  • இதில் பராட்டாவை சேர்த்து நன்கு கலக்கவும். இதை செய்யும் போதே முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.
  • பராட்டா கலவையில் முட்டையை ஊற்றி நன்கு கலந்து, 3 நிமிடம் வேக விடவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

Tuesday, March 17, 2009

வெந்தயக்கீரை சாதம்

தேவையானவை

வெந்தயக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
சாதம் - 11/2 கப்
வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறியது)
தக்காளி - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
கடுகு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு







செய்முறை


  • சாதத்தை உதிரியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

  • அதில் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  • தக்காளி வெந்ததும், சாதம் சேர்த்து நன்கு கலக்கவும்.
அப்பளம், வடகம் அல்லது, சிப்ஸ் உடன் சாப்பிடலாம்.

Saturday, March 14, 2009

தக்காளி குழம்பு

தேவையானவை

வெங்காயம்- 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை
வர மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டுகள்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 4 அல்லது 5
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்
உப்பு


செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.
  • பிறகு அதே எண்ணெயில் 3/4 வெங்காயம், பட்டை, சோம்பு, கசகசா, சீரகம், மிளகு, பாதி கறிவேப்பிலை சேர்த்து சிறு தீயில் வறுக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் மல்லித்தூள், தேங்காய் சேர்த்து வறுத்து தனியே எடுக்கவும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 11/2 தக்காளியை வதக்கி எடுக்கவும்.
  • அனைத்தையும் ஆற விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்தவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


இட்லி, தோசை அல்லது சாதத்துடனும் சாப்பிடலாம்.

Tuesday, March 10, 2009

பருப்பு சாதம்

கொங்கு நாட்டில் பிரபலமான உணவு இது. அரிசி பருப்பு சாதம்னும் சொல்லலாம்.




தேவையானவை

அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்




வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1/2 (நறுக்கியது)
தேங்காய் துறுவல் - 1 டேபிள்ஸ்பூன் (optional)
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு
எண்ணெய்
உப்பு





செய்முறை

  • குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் தாளித்து, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அதில் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.










  • அதில் கழுவிய அரிசி, பருப்பு சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரின் மூடியை போட்டு 1 விசில் வந்ததும், மிகச்சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
  • கடைசியாக மல்லி இலை தூவி கலக்கவும்..

நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்.

இதற்கு கத்தரிக்காய் புளிக்குழம்பும் நன்றாக இருக்கும்.

Saturday, March 7, 2009

குடமிளகாய் சாதம் (Bell Pepper Rice) (Capsicum Rice)

தேவையானவை

சாதம் - 4 கப்
குடமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் - 11/2 (நீளவாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை
உப்பு

தாளிக்க

கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
எண்ணெய்

வறுத்து பொடிக்க

வர மிளகாய் - 5
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/4 டீஸ்பூன்
நிலக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
மிளகு - 11/2 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - 1/2 டேபிள்ஸ்பூன்

வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்..

செய்முறை


  • சாதத்தை உதிரியாக வேகவைத்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, தாளித்து , வெங்காயம், குடமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • பிறகு அத்துடன் சாதம், உப்பு, மற்றும் பொடித்ததை சேர்த்து நன்கு கலக்கவும்.
அப்பளத்துடன் சாப்பிட நல்லா இருக்கும்.

முட்டை ஃப்ரை (Egg Fry)

தேவையானவை


முட்டை - 4
சக்திமசாலா fish fry masala - 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு(corn flour) - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு


எண்ணெய்
bread crumbs

செய்முறை

  • முட்டையை வேகவைத்து உறித்து, இரண்டாக வெட்டி வைக்கவும்.
  • அதன் வெள்ளைப்பகுதியில் லேசாக கீறல் போடவும்.
  • சக்திமசாலா, சோள மாவு, தயிர், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து, முட்டையில் தடவி 15 நிமிடம் வைக்கவும்.
  • ஒரு non-stick தவாவில் சிறிது எண்ணெய் விட்டு காய விடவும்.
  • முட்டையை bread crumbs ல் பிரட்டி தவாவில் போட்டு 2 நிமிடம் விடவும்.
  • பிறகு அதை திருப்பி போட்டு 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

இதை party starter ஆகவோ, தயிர் சாதத்துடனோ அல்லது அப்படியேவோ சப்பிடலாம்.

Wednesday, March 4, 2009

முட்டை கறி (Egg Curry)

எப்பவும் சக்தி மசாலா உபயோகிச்சு முட்டை கறி செய்யறது அலுத்துப் போனதால இது புது முயற்சி.



தேவையானவை

முட்டை - 6
வெங்காயம் - 1 (பொடியாக்க நறுக்கியது)
பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு


அரைக்க

தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை

  • முட்டையை வேகவைத்து ஓடு உறித்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  • பின்பு அரைத்த விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  • முட்டையை பாதியாக வெட்டி, அதில் 3 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பொடித்து, கொதித்த கலவையில் சேர்த்து கலக்கவும்.

  • மற்ற முட்டைகளையும் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.


சாதம், சப்பாத்தி இரண்டுக்கும் நல்ல combination.

Sunday, March 1, 2009

Easy காய்கறி சூப்

தேவையானவை

வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3 பல்
காய் விருப்பம் போல - 1/2 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி அல்லது ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்




பொடிக்க
மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்








செய்முறை

  • குக்கரில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் காய், அரிசி, பருப்பு, அரைத்த பொடி சேர்த்து கலந்து தண்ணீர் 3 கப் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்

  • 3 விசில் வந்ததும் இறக்கி பறிமாறவும்.

காய் விருப்பமானவற்றை சேர்க்கலாம். நான் இதில் கேரட், முருங்கைகாய், சோளமுத்துக்கள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, லீமா பீன்ஸ், ஸுக்கினி மற்றும் கீரை சேர்த்துள்ளேன்.

காரம் வேண்டுமானால் 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம

Related Posts with Thumbnails