தேவையானவை
கொண்டைக்கடலை - 1 கப் உருளைக்கிழங்கு - 1 (optional) (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு
எண்ணெய்
வறுத்து பொடிக்க:
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 4 அல்லது 5 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
பாதாம் - 4
முந்திரி - 10
எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.
செய்முறை
- கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- சிறிது தண்ணீர் விட்டு உருளைகிழங்கை வேக விடவும்.
- பிறகு கொண்டைக்கடலை சேர்த்து, அரைத்த பொடி , மிளகாய்த்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- மல்லித்தளை சேர்த்து எடுத்து வைக்கவும்.
பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன் சப்பிடலாம்.