Sunday, February 13, 2011

வெஜ்ஜி பஃப் ஹார்ட்ஸ் (Vegetable puff hearts)


இது மகி செய்த வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் மாதிரியேதான் கொஞ்சம் மாற்றி செய்துள்ளேன். Valentine's day special

தேவையானவை
பஃப் பேஸ்ட்ரி ஷீட் - 1
முட்டை - 1

ஸ்டஃபிங் செய்ய:
உருளைகிழங்கு - 1
கேரட் - 1/2
காளிஃபிளவர் - 1/4
பீன்ஸ் - 5
பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1/4
தக்காளி - 1/2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மல்லித்தளை

செய்முறை
  • பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை 1 மணி நேரம் முன்பு ஃப்ரீஸரில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.
  • காய்களை நறுக்கி குக்கரில் வைத்து 2 விசில் விட்டு எடுக்கவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி மற்றும் மல்லித்தளையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய் , தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • வேக வைத்த காய்களை நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • வதங்கிய வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலந்து, மசித்த காய்களையும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிடவும்.
  • பிறகு பேஸ்ட்ரி ஷீட்டை விரித்து சிறிது மைதா மாவு தூவி தேய்த்து கொள்ளவும்.
  • கய்கறி மசாலாவை பேஸ்ட்ரி ஷீட்டில் நன்கு பரத்தவும்.
  • பிறகு அதன் ஒரு பக்கமிருந்து உள்புறமாக ரோல் செய்து பாதியில் நிறுத்தவும்.
  • அதன் மறுபுறம் இருந்தும் உள்புறமாக ரோல் செய்யவும்.
  • மத்தியில் இரண்டுபுறமிருந்தும் ரோல் செய்ததை ஒன்றன் மேல் ஒன்று இருக்குமாறு செய்து , பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி ஃப்ரீஸரில் சிறிது நேரம் வைக்கவும்.
  • பிறகு அதை வெளியில் எடுத்து கத்தியில் நறுக்கி பேக்கிங் ட்ரேயில் சிறிது இடம் விட்டு அடுக்கவும்.
  • முட்டையில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அடித்து எடுத்து , ட்ரேயில் வைத்த பஃப்ல் தடவவும்.
  • 400F முற்சூடு செய்த அவனில் 10 - 13 நிமிடம் வைத்து எடுக்கவும்.
முட்டை இல்லாமலும் செய்யலாம். எண்
ணெய் ஸ்ப்ரே செய்தால் போதும்.

25 பேர் ருசி பாத்துட்டாங்க:

priya said...

very nice

priya said...

good one......

Mahi said...

சூப்பரா இருக்கு சுகந்திக்கா! டைமிங்கா ஹார்ட் ஷேப் செய்து அசத்திட்டீங்களா? :)

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது..அருமையான மாலை நேர ஸ்நாக்...

Unknown said...

miga arumaya irukku.Crisp and tasty

எல் கே said...

அடிச்சா முட்டைக்கு வலிக்காதா # டவுட்டு

Asiya Omar said...

அருமை சுகந்தி.அழகான ப்ரெசெண்டேஷன்.

Menaga Sathia said...

மாலை நேரத்துக்கான சூப்பர்ர் ஸ்நாக்ஸ்...

தெய்வசுகந்தி said...

நன்றி பிரியா!!

நன்றி மகி!!

நன்றி கீதா!!

நன்றி சவிதா!!

தெய்வசுகந்தி said...

@கார்த்திக், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எதுக்கும் செளம்யா கிட்ட கேட்டு பாக்கலாமா?
:-))

நன்றி ஆசியா!!

நன்றி மேனகா!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...just to look at it is good.. will try sometime...thanks for sharing..:)

vanathy said...

looking delicious.

Anonymous said...

That's my favourite. இவ்ளோ ஈசின்னு தெரியாது. இந்த சனிக்கிழமை செய்யப் போகிறேன்.

ஆயிஷா said...

சூப்பரா இருக்கு.

Unknown said...

போட்டோல பார்க்கும்போதே சூப்பரா,சாப்பிடணும் போல இருக்கு.

Priya dharshini said...

Nice hearten puffs...

Malar Gandhi said...

Perfect' love this savoury treat...veg-filled puffed hearts looks incredible, good one for the V day.

Jayanthy Kumaran said...

wow...sooooooooooper n tasty recipe..:D
beautiful clicks again..
Tasty appetite

Krishnaveni said...

wow, looks delicious and super yummy

apsara-illam said...

ஹாய் சுகந்தி இன்றுதான் உங்கள் சமையல் அறையை எட்டி பார்க்கின்றேன்.எடுத்ததுமே அழகான வடிவில் அசத்தலான வெஜ்ஜி பஃப் ஹார்ட்ஸ்.பார்க்கும் போதே சூப்பராக இருக்கு.
இனி ஒவ்வொரு ஐட்டமாக திறந்து ருசு பார்த்து கருத்தை சொல்கிறேன்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

Thenammai Lakshmanan said...

வித்யாசமான ஹார்ட்ஸ்..தெய்வசுகந்தி..:))

Anonymous said...

hai suganthi..this is a first time to me.. your veg puff hearts is very superb..

பித்தனின் வாக்கு said...

nice and healthy

மாதேவி said...

நன்றாக இருக்கிறது தெய்வ சுகந்தி.

Jaleela Kamal said...

rompa arumai

Related Posts with Thumbnails