Wednesday, April 28, 2010

புதினா துவரை புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நீள்வாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
துவரை - 1 கப் (frozen thuvar lilva)
பிரியாணி இலை - சிறிது
ஏலக்காய் - 1
முந்திரி - சிறிது
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்


அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லி - 1/2 கட்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 8
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.


செய்முறை
  • குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து பிரியாணி இலை, ஏலக்காய், முந்திரி சேர்த்து வதக்கவும்.
  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • முந்திரி சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் துவரை சேர்த்து வதக்கி, அரைத்தவற்றை சேர்த்து, உப்பும் சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
  • அதில் அரிசி சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி போடவும்.
  • 2 விசில் விட்டு இறக்கவும்.

துவரைக்கு பதிலாக, frozen soya bean, அல்லது ஏதாவது ஒரு frozen beans பயன்படுத்தலாம்.

Sunday, April 18, 2010

கோதுமை மாவு போண்டா

தமிழ் குடும்பம் சைட்ல பொள்ளாச்சி போண்டா பார்த்ததும்தான், அட இது நமக்கு புடிச்ச போண்டாவாச்சேன்னு ஞாபகம் வந்தது. ஆனா செய்யற விதம் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். நான் சின்னதா இருக்கறப்போ வீட்டுக்கு யாராவது திடீர் விருந்தாளி வந்தால் அம்மா இதுதான் செய்வாங்க. அம்மா கோதுமை மாவுலயும் செய்வாங்க.
தேவையானவை

கோதுமை மாவு - 2 கப்
இட்லி மாவு- 2 குழி கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 15(அல்லது தேவைக்கேற்ப)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி தழை - சிறிது
சோடா உப்பு - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்


செய்முறை
  • வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி அனைத்தையும் பொட்டியாக நறுக்கி வைக்கவும்.
  • கோதுமை மாவுடன் உப்பு, இட்லி மாவு மற்றும் நறுக்கிய பொருள்கள் சேர்த்து சிறிது நீ சேர்த்து தளர பிசையவும்.
  • சப்பாத்தி மாவு மாதிரி கெட்டியாவும் இருக்க கூடாது, இட்லி மாவு மாதிரியும் இருக்க கூடாது, இரண்டுக்கும் நடுவில் உள்ள பதத்திற்கு பிசையவும்.
  • கடாயில் எண்ணெயை காய வைத்து சிறிது சிறிதாக கிள்ளி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னியோட சாப்பிட நல்லா இருக்கும். சும்மாவும் சாப்பிடலாம்.

இதுவே மைதா மாவிலும் செய்யலாம்.

Sunday, April 11, 2010

அவகாடோ டிப் மற்றும் guacamole sandwich

அவகாடோ டிப் (Guacamole)

தேவையானவை:
அவகாடோ - 2
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (விதை நீக்கி பொடியாக நறுக்கியது)
மல்லித்தளை - சிறிது (பொடியாக நறுக்கியது)
ஹாலப்பினோ மிளகாய் - 1 (விதை நீக்கி பொடியாக நறுக்கியது)
உப்பு
மிளகுத்தூள்
எலுமிச்சைசாறு - சிறிது

செய்முறை:
  • அவகாடோவை நறுக்கி கொட்டை நீக்கி, அதன் சதைப்பகுதியை வழித்தெடுத்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு ஃபோர்க் கொண்டு மசிக்கவும்.
  • அத்துடன் வெங்காயம், மிளகாய், மல்லித்தளை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து நன்றாக மூடி ஃப்ரிஜ்ல் வைக்கவும்
  • பரிமாறும் போது தக்காளியை கலந்து பரிமாறவும்.


உங்களுக்கு பிடித்த சிப்ஸ் உடன் சாப்பிடலாம்.


guacamole sandwich

தேவையானவை:

ரொட்டித்துண்டுகள்

அவகாடோ டிப்

ஹம்மஸ் (இது கொண்டைக்கடலையில் செய்தது. எல்லா கடையிலும் கிடைக்கும். நிறைய veriety கிடைக்கும். நான் உபயோகித்தது Garden vegetable hommus)

செய்முறை:

  • ஒரு ரொட்டியின் ஒரு புறம் அவகாடோ டிப்பை தடவவும்.
  • இன்னொரு ரொட்டியின் ஒரு புறம் ஹம்மஸ்ஸை தடவவும்.

  • இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

இதில் வேண்டிய காய்களை வெட்டி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கி, அதையும் வைத்து சாப்பிடலாம்.
சமைக்க நேரம்/விருப்பம் இல்லாத நாள்களில் sandwich+ fruits ஒரு நல்ல dinner. நேற்று இரவு சமைக்க விருப்பம் இல்லாததால் இதுவும் fruit salad ம் சாப்பிட்டோம்.

Related Posts with Thumbnails