Sunday, March 28, 2010

முளைகட்டிய கடலை புலாவ்

தேவையானவை


பாஸ்மதி அரிசி - 3 கப்
முளைக்கட்டிய கொண்டைக்கடலை - 11/2 கப்

அரைக்க

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 2
முந்திரி - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 3 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

பிரியாணி இலை - சிறிது
கடல்பாசி - சிறிது
ரோஜா மொக்கு - சிறிது
மராட்டி மொக்கு - சிறிது
வெங்காயம் - 1 ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
புதினா - சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் முளை கட்டிய கடலையை சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • அதில் அரிசியையும் சேர்த்து , உப்பு சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.
  • ஒரு விசில் வந்ததும், சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிட நல்லா இருக்கும். முளைகட்டிய கடலையில் புரோடின் நிறைய உள்ளதால் இது healthy புலாவ்.

Thursday, March 18, 2010

சோள பணியாரம்

சோளத்தில் செய்யப்படும் நிறைய உணவு வகைகள் கொங்கு பகுதியில் உண்டு. அதில் இதுவும் ஒன்று.


தேவையானவை:

சோளம் - 2 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு

சின்ன வெங்காயம் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை :
  • சோளம், அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் இரவே ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து, உப்பு கலந்து வைக்கவும்.
  • 8 லிருந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை யை அரைத்து, புளித்த மாவுடன் கலந்து வைக்கவும்.
  • பணியார கல்லை வைத்து பணியாரங்களாக ஊற்றி எடுக்கவும்.

சூடாக தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

Friday, March 5, 2010

அவகாடோ சப்பாத்தி

தேவையானவை:


அவகாடோ - 1
கோதுமை மாவு - 2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசலா - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • அவகாடோவை இரண்டாக வெட்டி அதன் சதைப்பகுதியை வழித்து எடுக்கவும்.
  • உடனே அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து விடவும், இல்லன்னா கறுத்துரும்.
  • கோதுமை மாவுடன் அவகாடோ, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து, சுடு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.

  • 2 அல்லது 3 மணி நேரம் கழித்து, சிறு, சிறு உருண்டைகளாக எடுத்து தேய்த்து, சப்பாத்தியாக போட்டு எடுக்கவும்.

இதில் எண்ணெய் சேர்க்க தேவையில்லை. அவகாடோவில் கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதால் சப்பாத்தி மிருதுவாக வரும். இதில் mono unsaturated fat அதிகம் இருப்பதால் உடம்புக்கும் நல்லது. L.D.L அளவைக் குறைக்க உதவும்.

Related Posts with Thumbnails