Sunday, November 28, 2010

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவையானவை

சாதம் உதிரியாக - 2 கப்
பச்சை கத்தரிக்காய் - 3 (நறுக்கியது)
கடுகு - சிறிது
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
எண்ணெய் - தேவைக்கு

அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லித்தளை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 7 அல்லது 8
புளி - சிறிது

செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து வைக்கவும்.
அப்பளம் அல்லது வடகம் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த நீளக்கத்தரிக்காய் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.(படம் google உதவி)

25 பேர் ருசி பாத்துட்டாங்க:

Nithu Bala said...

Puthinavum kathirikayum serthu seidhathu illai...pudhumayaai irukku..parkum podhey sappida thonuthu..thanks for this wonderful recipe..

தெய்வசுகந்தி said...

நன்றி நிது!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதினா கத்திரிக்காய் கலவையே வித்தியாசமா இருக்கே. சூப்பர்.

Menaga Sathia said...

புதினா+கத்திரிக்காய் காம்பினேஷன் நல்லாயிருக்குங்க....அருஅமி!!

அப்புறம் குறிப்புல கத்திரிக்காயை எப்போழுது சேர்த்து வதக்கனும்னு குறிப்பிடலை,பாருங்கள்...

GEETHA ACHAL said...

நானும் இந்த காம்பினேஷ்னில் செய்தது இல்லை...சூப்பராக இருக்கு...

தெய்வசுகந்தி said...

நன்றி புவனேஸ்வரி!

நன்றி மேனகா! //அப்புறம் குறிப்புல கத்திரிக்காயை எப்போழுது சேர்த்து வதக்கனும்னு குறிப்பிடலை,பாருங்கள்...
// இதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இப்போ சேர்த்துட்டேன்.

நன்றி கீதா!

எல் கே said...

வித்யாசமான கலவை

Kurinji said...

Comnination supera erukkuthu, seekiram seithu parkanum n thanks for sharing.

தெய்வசுகந்தி said...

நன்றி கார்த்திக்!!

நன்றி குறிஞ்சி!

Jaleela Kamal said...

அருமையான புதினா சாதம் மணக்குது துபாய் வரை, நானும் இன்று காலை புதினா சாதம்.பதிவு இன்னும் போடல.

எஸ்.கே said...

சூப்பாரா இருக்கு!

Kanchana Radhakrishnan said...

new combo.nice recipe.

Asiya Omar said...

அருமை. கத்திரிக்காயில் என்ன செய்தலும் பிடிக்கும்.சாதம் கேட்கவும் வேண்டுமா?

Mahi said...

கத்தரிக்காயை பார்த்ததும் உங்க வீட்டு காயோன்னு நினைச்சுட்டேன்.:)

வித்யாசமான காம்பினேஷன் சுகந்திக்கா!நல்லாயிருக்கு.

பித்தனின் வாக்கு said...

ITS LOOKS SO NICE. YAARUKKUM THERIYAAMA ANHTHA PLATETAI ENAKKU PARCEL PANNIVIDUNGAL.

Krishnaveni said...

delicious rice, love the colour, thanks for sharing suganthi

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

புதினாவும் கத்திரிக்காயும்... wow... புதுசா இருக்கே... சூப்பர் ரெசிபி

Kurinji said...

u have a sweet surprise in my blog!

http://kurinjikathambam.blogspot.com/2010/12/award-time.html

Magia da Inês said...

♥♥ Olá, amiga!
♥ A receita é tudo de bom!!!Com todos esses ingredientes deliciosos.♥♥
Seu blog está muito bonito. ♥
♥ Beijinhos.
Brasil♥♥

மாதேவி said...

புதினா கத்தரிக்காய் சாதம் நன்றாக இருக்கிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்... பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு... ட்ரை பண்றேன்..
புக் மார்க் பண்ணி வச்சிட்டேன்..
நன்றி :)

Anonymous said...

puthusaaa irukkunga. ithuvaraikkum pannathu illai. muyarchi panren ..

Kousalya Raj said...

தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...

http://kousalya2010.blogspot.com/2011/01/2010.html

தோழி என்ன ஆச்சு உங்களை ரொம்ப நாளாக காணவில்லை...தொடரை எழுத வேண்டியாவது வருவீர்கள் என்று அழைத்திருக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

nice healthy recipe.I like it.

arunadevi said...

Very Different your pudhina katthirikai satham

Related Posts with Thumbnails