Tuesday, July 6, 2010

தக்காளி சாதம்

தேவையானவை

சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 (நீள வாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 10 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தளை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு

அரைக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு -1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
செய்முறை

  • சாதத்தை உதிரியாக செய்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி , அரைத்தவற்றையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • மல்லித்தளை, புதினா சேர்த்து கலக்கவும்.
  • இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.

இந்த மசாலாவை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடவும் உபயோகிக்கலாம்.

15 பேர் ருசி பாத்துட்டாங்க:

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...எப்பொழுதும் தக்காளி சாத்திற்கு மட்டும் புதினா சேர்க்க மாட்டேன்...சேர்த்தால் பிரியாணி மாதிரி டேஸ்ட் இருக்கும் என்பதால் அதனை சேர்ப்பது இல்லை...ஆஹா...எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த கலந்த சாதம்...

ராம்ஜி_யாஹூ said...

nice recepie thanks for sharing

Menaga Sathia said...

மிகவும் அருமையாக இருக்கு!! எனக்கு ரொம்ப பிடித்த சாதம்...

ஜெய்லானி said...

பாக்கும் போதே கேக்குது.

Chitra said...

பார்த்தாலே உடனே சாப்பிடணும் போல இருக்குது.

Mahi said...

2 இன் 1 தக்காளி கூட்டா? அருமையா இருக்கு!

தெய்வசுகந்தி said...

நன்றி கீதா!!! நான் எப்பொழுதும் தக்காளி சாதத்துக்கு புதினா சேர்ப்பேன்.

நன்றி ராம்ஜி!!!

நன்றி மேனகா!!!!!!!!!!!!

நன்றி ஜெய்லானி!! உங்களுக்குத்தான் இது!

நன்றி சித்ரா!!!!!!

நன்றி மகி!! 2 இன் 1 கூட்டேதான்.

கவி அழகன் said...

supper

தெய்வசுகந்தி said...

நன்றி யாதவன்!!

Anonymous said...

சில வேளைகளில் பொடியாக அரிந்த தக்காளி போட்டு செய்தாலும் படத்தில் காட்டின மாதிரி திக் பேஸ்ட் வருவதில்லைக்கா.

ரொம்ப பிடிச்சதில் தக்காளி சாதமும் ஒன்று. எங்கள் ஊரில் (இலங்கையில்) கலந்த சாதம் செய்வதில்லை) சோ, நானாக கத்துண்டது இது. நான் எப்படி தக்காளி சாதம் செய்வேன்னு எழுதினேன்னா எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிடுவீங்க. தாளிதம் பண்ணிட்டு, டொமேட்டோ கெட்சப் கொதிக்க வைத்து சாதத்தில் பிரட்டி செய்வேன். ஹா ஹா ஹா.

சில சைட்ல பார்த்து செய்தாலும் உங்க படத்தில காட்டின மாதிரி இப்படி நிறமாக திக்காக பேஸ்ட் வருவதில்லை. டிப்ஸ் ப்ளீஸ்
அப்புறம் நான் அரைக்கிலோ தக்காளி போட்டால் தான் இரண்டு கப் சாதத்துக்கு போதுமாக வரும்.

ராமலக்ஷ்மி said...

மசாலாவைத் தனியாக செய்து கொள்வது வசதியே. நல்ல குறிப்புக்கு நன்றி.

Anonymous said...

இது என் அம்மா எனக்காக மட்டும் செய்து கொடுத்தது.

நினைவில் நின்றவை.நினைவூக்கூர்ந்தமைக்கு நன்றி

சதிஷ்

தெய்வசுகந்தி said...

@அனாமிகா, நன்றி!!
கெட்சப்ல தக்காளி சாதமா?:-)
இந்த கலருக்குதான் காஷ்மீரி சில்லி சேர்த்துருக்கேன். நான் இதுக்கு 2 பெரிய தக்காளி சேர்த்தேன். 1/4 கிலோ இருக்கும். திக்காக வர எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.


@ ராமலக்ஷ்மி, நன்றிங்க்க! ஆமாங்க தனியா செஞ்சு வைக்கறது வசதி!!

@ சதீஷ், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... உடனே செஞ்சு சாப்பிடணும் போல இருக்கு நீங்க சொன்ன விதம்...சூப்பர் சுகந்தி...

தெய்வசுகந்தி said...

நன்றிங்க தங்கமணி!!!

Related Posts with Thumbnails