Thursday, June 17, 2010

டொமாட்டிலோ(Tomatillo/ Husk tomato) பருப்பு

டொமாட்டிலோ அல்லது ஹஸ்க் டொமாட்டோ, பார்ப்பதற்க்கு பச்சை தக்காளி போலவே இருக்கும், ஆனால் அதன் மேல் ஒரு லேயர் இருக்கும். இது தென் அமெரிக்க சமையலில் நிறைய உபயோகப்படுத்தப்படும். புளிப்பு சுவையுடன் இருக்கும். இதில பருப்பு மாதிரி ட்ரை பண்ணினேன். மாங்காய் போட்ட சாம்பார் மாதிரி நல்லாவே இருந்தது.
தேவையானவை

துவரம் பருப்பு - 1/2 கப்
டொமாட்டிலோ - 3
வெங்காயம் - 1/2
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
  • கொதித்தவுடன் அதில் பருப்பு சேர்த்து வேக விடவும்.
  • டொமாட்டிலோவின் மேல் லேயரை எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • பருப்பு முக்கால் பதம் வெந்ததும் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் டொமாட்டிலோவை சேர்த்து வேக விடவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைக்கவும்.
  • பருப்பும் டொமாட்டிலோவும் நன்கு வெந்ததும் அதில் கடாயில் உள்ளவற்றை சேர்த்து ஒரு கொதி விடவும்.
  • பிறகு அதை எடுத்து கடைந்து வைக்கவும்.

சாதத்துடன் சாப்பிட நன்றாக இருந்தது.

12 பேர் ருசி பாத்துட்டாங்க:

பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்குங்க

தெய்வசுகந்தி said...

நன்றிங்க சங்கர்!!!!!!

Chitra said...

Tasty tomatillo koottu. :-)

Menaga Sathia said...

சூப்பராயிருக்கு சுகந்தி!! இதுவரை இந்த காயை பார்த்ததில்லை....

Mahi said...

இது தக்காளியா சுகந்திக்கா? எனக்கு இப்பத்தான் தெரியும்..இதன் தோலைப் பார்த்து,என்னமோ காய்னு நினைத்து இதுவரை கையில கூட எடுத்து பார்த்ததில்ல நானு! :)

பருப்பு சூப்பர்!

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...ஏன் தெய்வசுகந்தி என்ற பெயரினை நீக்கி வெரும் சுகந்தி என்று எழுதி இருக்கின்றிங்க...."தெய்வசுகந்தி" பெயர் மிகவும் அழகாக இருக்கின்றது...

தெய்வசுகந்தி said...

நன்றி சித்ரா!!!!
நன்றி மேனகா!!!!!! இங்கே எல்லா கடையிலயும் கிடைக்கும்.

ஆமா மகி தக்காளியோட சேந்ததுதான். கொஞ்சம் புளிப்பா இருக்கும்.

கீதா நன்றிங்க!!!! யாரும் தெய்வசுகந்தின்னு கூப்பிடறதில்லை அதனால மாத்தினேன்.

எல் கே said...

/தெய்வசுகந்தின்னு//

என்னங்க இப்படி சொல்லிடீங்க அம்மணி. பேரு அருமைய இருக்கு.. மாத்துங்க அப்புறம் பாருங்க எல்லரௌம் கூப்பிடுவாங்க

எல் கே said...

இதுவும் இங்கக் கிடைக்காதா ????

தெய்வசுகந்தி said...

ஆமாங்க கார்த்திக்!! இத எழுதறப்போவே நீங்க வந்து கேப்பீங்கன்னு நெனைச்சேன். அப்புறம் பேரை மறுபடியும் தெய்வசுகந்தின்னு மாத்திரலாம்ங்க!!!!

Unknown said...

தெய்வசுகந்தி, புது காயா இருக்கேன்னு ரொம்ப ஆசையா முன்னே ஒரு முறை (சாம்பார் போல) செய்தேன் - கொஞ்சம் புளியையும் போட்டுட்டேன்...எக்ஸ்ட்ரா புளியினால், புளிச்சு வழிந்தது:-) காயைப் பாத்தவுடன், பழைய அனுபவம் நினைவுக்கு வந்தது.

ஆனா, உங்க முறையில் நல்லா வரும்! அல்மோஸ்ட் இதே முறையில் ஓரிரு முறை செய்து பார்த்திருக்கிறேன் (கடைந்ததில்லை, சாம்பார் பொடி போடுவேன்). என்னவோ இந்த காய் பிடிக்கும். செய்முறை/படத்துக்கு நன்றி.

தெய்வசுகந்தி said...

@ கெக்கே பிக்குணி, நன்றிங்க!! நானும் புதுசா ஏதாவது காய் பார்த்தா முதல்ல பருப்புல சேர்த்துதான் ட்ரை பண்ணுவேன்.நல்லா வரலைன்னா கூட, தேங்காய் சேர்த்து சரி செய்திடலாம்.

Related Posts with Thumbnails