Wednesday, June 23, 2010

கொள்ளு ரசம்

தேவையானவை

கொள்ளு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
மல்லித்தளை
பூண்டு - 3 பல் (நன்றாக தட்டி வைக்கவும்)(crushed)
கடுகு

பொடிக்க
சீரகம் - 1டேபிள்ஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 4
(நன்கு பொடிக்கவும்) அம்மியில் பொடித்தால் நல்லா இருக்கும். நான் சின்ன கல்லில் பொடிப்பேன். மிக்ஸியும் உபயோகிக்கலாம்.


செய்முறை

  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு கொள்ளு வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • கடைசியாக மல்லித்தளை சேர்க்கவும்.
இதை சூப் போல அப்படியே குடிக்கலாம். சாதத்துடன் சாப்பிடலாம்.

தட்டைபயறு, பாசிப்பயறு வேக வைத்த தண்ணீரிலும் இதே போல் ரசம் செய்யலாம்.

11 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

மிகவும் அருமையாக இருக்கு ரசம்.வெந்தயம் சேர்த்திருப்பது சூப்பர்ர்ர்...

ப.கந்தசாமி said...

இதைப்பார்த்தவுடன் கொள்ளு ரசம் சாப்பிணும்போல இருக்கு. அம்மையாரை தாஜா பண்ணோணும்.

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா!!!!.

நன்றி சித்ரா!! மசூர் பருப்பும் கொள்ளும் ஒன்னு இல்லைங்க. இங்கே கடையில baaned item னு சொன்னாங்க. இப்பதான் கொஞ்ச நாளா கிடைக்கறதில்லை.

வருகைக்கு நன்றிங்க அய்யா!!. அம்மா கண்டிப்பா செஞ்சு தருவாங்க, நீங்க கேட்டிங்கன்னா!!!!!!

Asiya Omar said...

ரசம் பார்க்கவே சூப் மாதிரி குடிக்கணும்னு தோணுது.சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்..

எல் கே said...

good for health

Menaga Sathia said...

இன்னிக்கு உங்க கொள்ளு ரசம்தான் செய்தேன்.சூப்பரோ சூப்பர்....நான் சூப்பாக குடித்துவிட்டேன்.மகளுக்கு சாதத்தில் பிசைந்து கொடுத்தேன்.இனி அடிக்கடி செய்வேன்...நான் செய்வடஹி விட உங்களுடையது நன்றாகயிருந்தது...சுவையான குறிப்பை தந்த உங்களுக்கு நன்றி !!

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஆசியா!!

நன்றிங்க கார்த்திக்!!!

நன்றி மேனகா!!! இது எங்க அம்மா செய்யற ரெசிபி!

Mahi said...

அருமையா இருக்கு கொள்ளுரசம்! அப்படியே குடிச்சுடலாம் போல இருக்கே..:P :P

ஜெய்லானி said...

கொள்ளு ரசம் அருமை..!!
:-)

ஜெய்லானி said...

//இதை சூப் போல அப்படியே குடிக்கலாம்//

இதுல எத்தனை ஹார்ஸ் பவர் தெம்பு இருக்குன்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்....!!

தெய்வசுகந்தி said...

நன்றி மகி!!!
நன்றிங்க ஜெய்லானி!!! நிஜமாவே இது குதிரை சாப்பிடறதுதான்!!!!!!

Related Posts with Thumbnails