Wednesday, April 28, 2010

புதினா துவரை புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நீள்வாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
துவரை - 1 கப் (frozen thuvar lilva)
பிரியாணி இலை - சிறிது
ஏலக்காய் - 1
முந்திரி - சிறிது
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்


அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லி - 1/2 கட்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 8
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.


செய்முறை
  • குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து பிரியாணி இலை, ஏலக்காய், முந்திரி சேர்த்து வதக்கவும்.
  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • முந்திரி சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் துவரை சேர்த்து வதக்கி, அரைத்தவற்றை சேர்த்து, உப்பும் சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
  • அதில் அரிசி சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி போடவும்.
  • 2 விசில் விட்டு இறக்கவும்.

துவரைக்கு பதிலாக, frozen soya bean, அல்லது ஏதாவது ஒரு frozen beans பயன்படுத்தலாம்.

17 பேர் ருசி பாத்துட்டாங்க:

Chitra said...

I like mint flavor very much. Thank you for the recipe.

Menaga Sathia said...

மிகவும் வித்தியாசமான புலாவ் நல்லாயிருக்கு!!

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா!!!
நன்றி சித்ரா!!!

GEETHA ACHAL said...

எப்பொழுதும் போல வித்தியசமான குறிப்பு...இது உங்கள் ஊர் ஸ்பெஷ்லா...அடுத்த முறை கடைக்கு செல்லும் பொழுது இந்த துவரையினை கண்டுபிடித்து சமைக்க வேண்டியது தான்...நன்றி

தெய்வசுகந்தி said...

நன்றி கீதா!! இது எங்க ஊர் ஸ்பெசல் இல்லை. புதினா புலாவ்ல ப்ரொடீன் எதுவும் சேர்ந்தா நல்லா இருக்குமேன்னு துவரை அல்லது ஏதாவது பீன்ஸ் சேர்த்து செய்வேன். குருமாவுலயும் அப்படித்தான்.

தக்குடு said...

nalla irukkuppa!!

தெய்வசுகந்தி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தக்குடுபாண்டி!!!

எல் கே said...

எப்படி உங்க பதிவ தவற விட்டேன்? நல்ல சத்தான சமையல் .

hopw you are fine now

தெய்வசுகந்தி said...

நன்றி LK!!!!!. I'm fine now. Thanks!!!

எல் கே said...

@சுகந்தி

உங்க வலைப்பக்கதில எதாவது வைரஸ் பிரச்சனை இருக்கா? என்னோட firewall unga வலைப்பக்கத்தை அனுமதிக்க மாட்டேங்குது (அலுவலகத்திலும் கூட ). இப்ப அதை நிறுத்தி வைத்து விட்டு இங்கு பின்னூட்டம் இடுகிறேன் . சர் செய்யுங்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அருமையா இருக்கு.. ஒருதடவை செய்துபார்க்கணும்.

தெய்வசுகந்தி said...

@ Lk
என்ன பிரச்சனைன்னு தெரியலயே! ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.

@ ஸ்டார்ஜன்
நன்றிங்க!!! ஈசிதான் செய்யறது.

எல் கே said...

enna senjeenga.. ippa correcta open aguthu

தெய்வசுகந்தி said...

I deleted some widgets.

Nithu Bala said...

healthy rice..nanum entha sadam pannuven..

Saran said...

Officela irundhu kelambitey irkuken. Innikku thangamaniya idhai samachu kodukka sollanum.

தெய்வசுகந்தி said...

Thanks saran!!

Related Posts with Thumbnails