Sunday, March 28, 2010

முளைகட்டிய கடலை புலாவ்

தேவையானவை


பாஸ்மதி அரிசி - 3 கப்
முளைக்கட்டிய கொண்டைக்கடலை - 11/2 கப்

அரைக்க

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 2
முந்திரி - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 3 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

பிரியாணி இலை - சிறிது
கடல்பாசி - சிறிது
ரோஜா மொக்கு - சிறிது
மராட்டி மொக்கு - சிறிது
வெங்காயம் - 1 ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
புதினா - சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் முளை கட்டிய கடலையை சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • அதில் அரிசியையும் சேர்த்து , உப்பு சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.
  • ஒரு விசில் வந்ததும், சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிட நல்லா இருக்கும். முளைகட்டிய கடலையில் புரோடின் நிறைய உள்ளதால் இது healthy புலாவ்.

13 பேர் ருசி பாத்துட்டாங்க:

Chitra said...

something new! wow!

Nathanjagk said...

நல்ல குறிப்பு! நன்றிகள்!

தெய்வசுகந்தி said...

நன்றி சித்ரா!!!
நன்றி ஜெகநாதன்!!!!!

Menaga Sathia said...

ஹெல்தி புலாவ் பார்க்கும் போதே சாப்பிடத் தோனுது...

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா!!!!!

Anonymous said...

super.

Kanchana Radhakrishnan said...

புரோடின் நிறைய உள்ளதால் இது healthy புலாவ். True.

Unknown said...

உடல் நலத்திற்கு தேவையான நல்ல குறிப்பு. சூப்பர்!

உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தலத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

தெய்வசுகந்தி said...

நன்றி புனிதா!!!!

பித்தனின் வாக்கு said...

நல்ல சத்தான சுவையான உணவு,வித்தியாசமாவும் இருக்கு. நன்றி.

பித்தனின் வாக்கு said...

அது ஏனுங்க தக்குன்னுடு படம் போட்டு இருக்கீங்க. முழுத்தட்டும் போடலாம் அல்லவா. எங்களுக்கு அரை வயிறுதான் நிறைந்தது. அட்லீஸ்ட் படத்தையாவது பார்த்து திருப்தி பெறலாம் இல்லையா?

தெய்வசுகந்தி said...

நன்றிங்க சுதாகர்!!!
படம் onlineல எடிட் பண்ணினதுல சின்னதாயிருச்சுங்க.

Priya said...

அட இது வித்தியாசமான ரெசிபியா இருக்கே!!!

Related Posts with Thumbnails