Monday, November 23, 2009

கீரை(Spinach) கடைசல்

தேவையானவை

ஸ்பினாச் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1/4 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 2 பல் நறுக்கியது
எண்ணெய்
உப்பு


செய்முறை
  • கீரையை கழுவி சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு வேக வைக்கவும். (தண்ணீர் மிகவும் குறைவாக வைக்கவும்.)
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • கீரையையும், வதக்கியவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (2 அல்லது 3 சுத்து விட்டால் போதும். ரொம்ப அரைக்க வேண்டாம்).

சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லா இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க சிறிது வெண்ணெய் சேர்த்து அரைத்து கொடுக்கலாம். என் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் மிகவும் பிடித்தமானது இது. செய்வதற்கும் சுலபமானது.

9 பேர் ருசி பாத்துட்டாங்க:

ILA (a) இளா said...

is that the Same suganti met at Kondu festiv?

பித்தனின் வாக்கு said...

ஆகா எனக்கு மிகவும் பிடித்தமான கீரைக் கடைசல், உங்கள் முறை கொஞ்சம் புதியதாக இருக்கின்றது, இதில் கீரை கடைசல் கொஞ்சம் கீரை வாசம் அடிக்காதா?.

எங்க வீட்டில் கீரையை மசித்து வதக்கிய வெங்காயம், பூண்டு, ஆகியவற்றுடன் சேர்த்து வாணலியில் இட்டு கொஞ்சம் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுவார்கள். நன்றி.

inbaa said...

i like this one very much..but i dont know which type of kirai to buy.if i ask for spinach..its different stuff than wht my used in india.do u have the exact name?

தெய்வசுகந்தி said...

இன்பா நீங்க இந்தியால இருக்கறிங்கன்னா நல்ல கடை கீரையே கிடைக்கும்.இல்லன்னா பாலக்கீரைதான் ஸ்பினாச்.

தெய்வசுகந்தி said...

இளா அதே சுகந்திதான்.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க சுதாகர். நல்லா வேக வைக்கறதால கீரை வாசம் வராது. புளி சேர்க்கறது புதுசா இருக்கு

Menaga Sathia said...

நான் கீரை வேகவைக்கும் போதே வெங்காயம்,பூண்டு,புளி சேர்த்து வேக வைப்பேன்.

இன்னிக்கு உங்க முறைப்படி வதக்கி செய்தேன்.கீரை வேகவைக்கும் புளி சேர்த்தேன்.காரத்துக்காக 2 ப.மிளகாய் சேர்த்தேன்.ரொம்ப நன்றாக இருந்தது.மகளும் விரும்பி சாப்பிட்டாங்க.மிக்க நன்றி சுகந்தி!!

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா. நான் அடுத்த முறை புளி சேர்த்து செஞ்சு பார்க்கிறேன்.

Uma Madhavan said...

Good stuff. I'll try.
Read my reciepes at
http://snehiti.blogspot.com

Related Posts with Thumbnails