Wednesday, November 25, 2009

ரசம் (புளி சேர்க்காத ரசம்)

இந்த ரசத்தை எங்க வீட்ல செலவு ரசம்னு சொல்லுவாங்க. புளி சேர்க்காம செய்யற ரசம். சளி பிடிச்சிருந்தா எங்க அம்மா இந்த ரசம் வெச்சு குடிக்க சொல்லுவாங்க. எனக்கு பிடித்த ரசம் இது.



தேவையானவை



வெங்காயம் - சிறிது பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு
சீரகம்
உப்பு
எண்ணெய்



வதக்கி அரைக்க



சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
வர மிளகாய் - 1
கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

  • அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

இது சூப் மாதிரி குடிக்கவும் நல்லா இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம்.

இத்துடன் தூதுவளை இலை 4 அல்லது 5 சேர்த்து வதக்கி அரைத்து செய்யலாம்.

தூதுவளைப்பொடி 1 டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம்.

அரைக்கும் போது கொள்ளு 1 டீஸ்பூன் சேர்த்து அரைத்தும் செய்யலாம்.

11 பேர் ருசி பாத்துட்டாங்க:

பெருசு said...

thankska

i was searching for this recipe for along time.my mother too make when ever we are with cold or running nose, this helped a lot to recover.

tks

தெய்வசுகந்தி said...

நன்றி பெருசு.

Uma Madhavan said...

Good Receipe.

Read my blog for receipes

http://snehiti.blogspot.com

Menaga Sathia said...

இந்த ரசம் புதுசா இருக்கு.எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.அப்போ செய்து பார்க்கிறேன்.ரசம் பார்க்கும் போதே குடிக்கனும் போல் இருக்கு சுகந்தி!!

தெய்வசுகந்தி said...

நன்றி உமா. உங்க வலைப்பூ நல்லா இருக்குதுங்க்க. நிறைய எழுதுங்க.

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா.

Uma Madhavan said...

நன்றாக இருக்கிறது.
http://snehiti.blogspot.com

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்குங்க. நானும் டிரை பண்ணிப் பார்க்கின்றேன். நான் கொங்கு நாட்டு சமையல் பதிவுகளுக்காக தங்களுக்கு விருது அளித்துள்ளேன். விருதினைப் பெற்று என்னை சிறப்பிக்கவும். நன்றி.

பித்தனின் வாக்கு said...

நான் தங்களுக்கு ஒரு விருதினை அளித்துள்ளேன். அதை பெற்று என்னச் சிறப்பிக்கவும். நன்றி.

எல் கே said...

இது அரைச்சு விட்ட ரசம்தான

தெய்வசுகந்தி said...

Lk இதை செலவு ரசம்னு தான் சொல்லுவாங்க. அரைச்சு விட்ட ரசம்னும் சொல்லிக்கலாம்.

Related Posts with Thumbnails