Thursday, October 22, 2009

காளிஃப்ளவர் குருமா

தேவையானவை

காளிஃப்ளவர் - 1 (சிறிய பூக்களாக நறுக்கவும்)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)(optional)
கறிவேப்பிலை
கடுகு
உப்பு
எண்ணெய்

அரைக்க


தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் - 10
வறுகடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கசகசா - 1 டீஸ்பூன்
(நன்கு அரைத்துக்கொள்ளவும்)


செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கி, காளிஃப்ளவரை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • காளிஃப்ளவர் வெந்ததும், அரைத்த விழுதை சேர்த்து 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் உப்புமாவுக்கும் நல்ல combination. இது வெள்ளைக் குருமான்னும் சொல்லுவாங்க. காய் எதுவும் இல்லேன்னா கூட வெறும் வெங்காயம் தக்காளில செஞ்சாலும் நல்லா இருக்கும்.

4 பேர் ருசி பாத்துட்டாங்க:

பித்தனின் வாக்கு said...

ஆகா பார்க்க நல்லா இருக்குங்க, இதுகூட இருந்தா ஒரு ஆறு சப்பாத்தி, எட்டு பூரி சாப்பிடலாம்முன்னு தோனுது. பட்டர் நான் கூட வெச்சு சாப்பிடலாம். நல்ல பதிவு, நன்றி.

GEETHA ACHAL said...

சூப்பர்ப்..

உங்கள் ப்ளாக் பக்கம் வந்தாலே மைசூர்பாக நியாபம் வந்துவிடுதுப்பா...அவ்வளவு அருமையாக எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது..

இன்னோரு முறையும் செய்தாகிவிட்டது...இந்த முறை மாவினை சிறிது வறுத்து செய்தேன்...மணமாக இருந்தது.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க சுதாகர்.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க கீதா. நான் எப்பவாவதுதான் செய்யறது.எங்க வீட்ல நாந்தான் இனிப்பு அதிகம் சாப்பிடரது. அதனால செஞ்சா அதிகமா நானே சாப்பிடவேண்டி இருக்கும்கறதால அடிக்கடி செய்யறதில்ல. அடுட்ட்த முறை நானும் வறுத்து செய்து பார்க்கிறேன்.

Related Posts with Thumbnails