Friday, October 16, 2009

மைசூர்பாக்

இதுக்கு ஏன் இந்த பேர்னு தெரியல. ஒரு வேளை மைசூர்லதான் மொதல்ல செஞ்சிருப்பாங்களோ? :-).


தேவையானவை


கடலைமாவு - 2 கப்
சர்க்கரை - 3 கப்
எண்ணெய் - 3 கப்
நெய் - 1 கப்




செய்முறை

  • ஒரு நான் ஸ்டிக் கடாயில் (செய்யறதுக்கு ஈசி) சர்க்கரை போட்டு, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • அது கொதிக்கும் நேரத்தில் கடலை மாவில் எண்ணெய் விட்டு கரைத்து வைக்கவும்.
  • சர்க்கரை பாகு ஒரு கம்பிப்பாகு பதம் வந்ததும் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும். (பக்கத்தில் கணவர் இருந்தால் வசதி :-) )
  • சிறிது சிறிதாக எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
  • சிறிது நேரத்தில் எண்ணெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது எண்ணெய் சேர்ப்பதை நிறுத்தி விடலாம்.

  • கிளறும் போதே நன்கு பொற பொறவென பொங்கி வரும் போது எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.
  • ஓரளவு ஆறியதும் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளவும்.


கடலை மாவைக்கரைத்து செய்வதால், கட்டி தட்டாமல் வரும்.இது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக் போலவே இருக்கும்.
Thanks to Govind அவருதான் கிளறினாரு.


அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

16 பேர் ருசி பாத்துட்டாங்க:

Shanthi said...

SUGANTHI,MYSORE PAK LOOKS PERFECT AND DELICIOUS.

தெய்வசுகந்தி said...

thanks shanthi.we will bring tomorrow.

நாளும் நலமே விளையட்டும் said...

கடலை எண்ணை கலந்தால் சாப்பிட முடியாது.

தெய்வசுகந்தி said...

நன்றி நாளும் நலமே விளையட்டும் !
இதுல கனோலா ஆயில் உபயோகித்தேன். ஒரு வித்தியாசமும் தெரியல.

Jaleela Kamal said...

கிருஷ்னா ஸ்வீட் மைசூர் பாக் அருமையோ அருமை. நானும் முன்பு செய்த‌து.

நாஸியா said...

ஆ... வாய் ஊருது! ரொம்ப எளிதா சொல்லி தந்துருக்கிங்க இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் செஞ்சு paakanum

தெய்வசுகந்தி said...

நன்றி ஜலீலா, நாஸியா

பித்தனின் வாக்கு said...

ஆகா பாக்கவே சூப்பரா இருக்கு. வாயில் கரையும் போல அவ்வளவு சாப்ட்டா தெரியுது.

அது என்ன நெய் ஒரு கப் சும்மா திகட்ட திகட்ட இரண்டு கப் ஊத்துங்க.

// கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும். (பக்கத்தில் கணவர் இருந்தால் வசதி :-) ) //
சம்பளம் இல்லாத வேலையாள் இருந்தால் வைத்துக் கொள்ளவும்(பக்கத்தில் கணவர் இருந்தால் வசதி :-)
இது மாதிரி உண்மையை எழுதுங்க. அது எதுக்கு மறைச்சு எழுதுறிங்க.

// Thanks to Govind அவருதான் கிளறினாரு.//
அப்ப அவருக்கு மைசூர்பா பண்ணினதுக்கு தேங்கஸ் கிடையாதா?(அவர்தான பண்ணினது).
இம்ம் ரொம்ப நல்லாயிருக்கு (நான் கூட சமையல் பதிவில் வித்தியாசமான அயிட்டம் எல்லாம் சொல்லியிருக்கேன். நேரம் கிடைக்கும் போது படித்து செய்து சாப்பிடவும். நன்றி.

தெய்வசுகந்தி said...

நன்றி பித்தன். உங்க பதிவுகளை நேரம் இடைக்கும் போது படிக்கிறேன்.

GEETHA ACHAL said...

சூப்பரான மைசூர்பாக்...தீபாவளிக்கு மறுநாள் செய்தேன்...தீபாவளிக்கு என்ரு நினைத்து சாப்பிட்டுவிட்டேன்..

நீங்கள் சொன்னது போலவே செய்தேன்..சிறிது எண்ணெயினை குறைத்து கொண்டேன்..

தட்டில் ஊற்றியவுடன் கெட்டியாக இல்லாமல் அல்வா மாதிரி இருந்தது..5 நிமிடம் கழித்து பார்த்தாலும் அப்படியே இருந்ததால்,அல்வாகவே சாப்பிட்டுவிட்டேன்..

மைசூர் அல்வாவினை சாப்பிட்டுவந்து பார்த்தால்,தட்டில் மீது இருப்பது இப்பொழுது, மைசூர் பாகாகிவிட்டது...

எங்கள் வீட்டில் அனைவரும் அன்றே காலி செய்துவிட்டோம்.

கடலைமாவினை எண்ணெயில் கலந்ததால், செய்வது மிகவும் சுலபமாக இருந்தது.

மிகவும் நல்ல பதிவு.

தெய்வசுகந்தி said...

நன்றி கீதா!நிறைய நேரம் ஆற விட்டால் நன்றாக வரும்.

suvaiyaana suvai said...

ஹாய் பார்க்கும்போதே சாப்பிடதோனுதே கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன்!
http://susricreations.blogspot.com

தெய்வசுகந்தி said...

நன்றி சுவையின்சுவை

radhu said...

Sister, I had prepared with the same description and came verywell, Everyone delighted with the taste. Thanks for the receipe. Laalkrish.blogspot.com; radhu-maalatheevu.blogspot.com; Krishnan.

தெய்வசுகந்தி said...

Thanks radhu.

Raji said...

Thanks suganthi will try it! If it didnt work i will be there in person to learn from you ;-)

Related Posts with Thumbnails