Thursday, September 3, 2009

முளைப்பயிறு(பாசிப்பயறு) பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 2 கப்
முளைப்பயிறு - 2 கப்
வெங்காயம் - 1(நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்திற்கு ஏற்ப)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
நெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:
பிரியாணி இலை - சிறிது
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
மராட்டி மொக்கு - 3
கடல்பாசி - சிறிது
ரோஜா மொக்கு - சிறிது


செய்முறை:


  • குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் + 1 டீஸ்பூன் நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
  • இதில் முளைப்பயிறு, பாஸ்மதி அரிசி சேர்த்து வதக்கி , உப்பும் சேர்த்து கலந்து 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விசில் போடவும்.
  • 1 விசில் வந்த்ததும், தீயைக்குறைத்து 5 நிமிடம் விட்டு இறக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம். புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. brown basmathi அரிசியும் உபயோகிக்கலாம்.

4 பேர் ருசி பாத்துட்டாங்க:

அது சரி(18185106603874041862) said...

ஐடியா புதுசா இருக்கே...குறிப்புக்கு நன்றி...ட்ரை பண்ணி பார்க்கிறேன்...

தெய்வசுகந்தி said...

நன்றிங்க அதுசரி!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

सुREஷ் कुMAர் said...

ஹாய்.. வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள்..

Related Posts with Thumbnails