Sunday, August 23, 2009

ஸ்விஸ் சார்டு(Swiss chard) பருப்பு

தேவையானவை


ஸ்விஸ் சார்டு(Swiss chard) - 1 கட்டு
துவரம் பருப்பு - 1/2 கப்
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
கடுகு
எண்ணெய்




செய்முறை

  • பருப்புடன் பூண்டு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
  • ஸ்விஸ் சார்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
  • அதில் ஸ்விஸ் சார்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  • பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சுவையான ஸ்விஸ் சார்டு(Swiss chard) பருப்பு ரெடி. சூடான சாதத்துடன் (நெய்யும்) சேர்த்து சாப்பிடலாம்

இன்று மதிய உணவு, சாதம், ஸ்விஸ் சார்டு(Swiss chard) பருப்பு மற்றும் புரோக்கலி பொறியல்.

2 பேர் ருசி பாத்துட்டாங்க:

Anonymous said...

எந்த பருப்பு வேணும்னாலும் போட்டுக்கலாமா?

தெய்வசுகந்தி said...

நான் துவரம் பருப்பு போட்டு செய்துள்ளேன். பாசிப்பருப்பிலும் செய்யலாம்.

Related Posts with Thumbnails