Sunday, June 14, 2009

காளான் குழம்பு (Mushroom kuzhambu)





தேவையானவை




காளான் - 1/4 கிலோ


வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

கடுகு

உப்பு




வதக்கி அரைக்க


சின்ன வெங்காயம் - 20

வரமிளகாய் - 4

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 4 சிறிய துண்டுகள்

கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை




  • காளானை கழுவி நறுக்கி வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

  • பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

  • இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.

  • அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.

  • பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.


இது கொங்கு நாட்டு கோழி குழம்பு செய்முறை. நான் கோழிக்கு பதிலாக காளான் சேர்த்துள்ளேன்.

11 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

ரொம்ப சூப்பராயிருக்கு,காளான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.செய்து பார்க்க போகிறேன்!!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

இவ்வளவவுதானா? கண்டிப்பாக செய்து சாப்பிட்டுவிட்டு, மீண்டும் பின்னூட்டும் போடுகிறேன்.

Sam said...

என்னோட‌ favourite காளான் குழ‌ம்பு. ரொம்ப‌ உப‌யோக‌மாய் இருக்கும்னு நினைக்கிரோம். It's nice to know that you are giving lot of tips and sharing Kongunadu recipes. ச‌ம்ப‌த், KL.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

செய்து சாப்பிட்டோம். மிகவும் நன்றாக இருந்தது. நான் திருப்பூர் நகரில் படித்த நாட்களை நினைவுப்படுத்தியது. ஆனால் ஒரு விஷியம், தக்காளி சேர்க்க மாட்டீர்களா? பதில் கூறவும் please.

தெய்வசுகந்தி said...

நன்றி தமிழ்நாட்டுத்தமிழன் இதுக்கு தக்காளி சேர்க்க மாட்டோம். இதிலேயே காளானுக்கு பதிலாக தக்காளி அல்லது உருளைக்கிழங்கு சேர்த்து செய்யலாம்.

மணிஜி said...

ஏன் இந்த கதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பவில்லை?

வேணுகோபால் said...

செஞ்சு சாப்பிட்டோம் !
நெசமாலுமே நம்ம கோங்கு டேஸ்ட் தாம்மா!!
மிக்க நன்றியம்மா !

தெய்வசுகந்தி said...

நன்றிங்க வேணுகோபால்!!!

APD said...

Hi . I am Anandapriya living in Michigan US. I am from dharapuram in tamilnadu .
I like ur receipe and I remember my mom. Our kongu nadu samayal is a unique one and I used to cook kozhi kolumbu and tomato kolambu like this. Thanks.

APD said...

Hi .its my favorite recipe. In my home we used to cook like this . We all from kongu region . Our side always Unique and healthy recipe. Thanks to publish our kongu nadu samayal.

APD said...

Hi . I am Anandapriya living in Michigan US. I am from dharapuram in tamilnadu .
I like ur receipe and I remember my mom. Our kongu nadu samayal is a unique one and I used to cook kozhi kolumbu and tomato kolambu like this. Thanks.

Related Posts with Thumbnails