Monday, June 22, 2009

மாங்காய் ஊறுகாய் (Mango Pickle)

கடையில் வாங்கும் ஊறுகாயின் வினிகர் வாசம் பிடிக்கத்தால், அம்மாவிடம் கேட்டு செய்தது இது.




தேவையானவை


மாங்காய் - 2 பெரியது
உப்பு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன் (வெந்தயத்தை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடிக்க வேண்டும்)
கடுகுத்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - சிறிது
நல்லெண்ணெய் - 2 கப்
கறிவேப்பிலை



செய்முறை


  • மாங்காயை கழுவி உலர்த்தி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • இதில் உப்பு கலந்து மூடி வைக்கவும். ( கண்ணாடி பாத்திரத்தில் வைத்தால் சீக்கிரம் கெடாது)
  • ஒவ்வொரு நாளும் கை படாமல் கலக்கி விடவும்.
  • 5 அல்லது 6 நாள் சென்ற பிறகு மிளகாய்த்தூளை ஊறிய மாங்காயுடன் கலக்கவும்.
  • கடாயில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் மாங்காயும் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.


2 வாரங்களுக்குப் பிறகு உபயோகிக்கலாம்.
6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்

5 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

சூப்பர்ர்ர்ர்ர்ர் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுதே......

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

வணக்கம்.
நான் பழைய தமிழ்நாட்டுத்தமிழந்தான்! தற்போது MSERK வாக அவதானித்துள்ளேன். எப்படியாவது இந்த 'தக்காளி ஊறுகாய்' மற்றும் 'பூண்டு ஊறுகாய்' எப்படி செய்யவேண்டும் என்பதை தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையென்றால் அம்மாவையாவது கேட்டுச் சொல்லுங்கள்.
நன்றி.

தெய்வசுகந்தி said...

தக்காளி ஊறுகாய் நான் அடிக்கடி செய்வதுதான். ஒரு பதிவு போடுகிறேன்.

sundar madurai said...

இன்று தான் நான் மாங்காய் ஊறுகாய் செய்வது தொடர்பாக தெரிந்து கொண்டேன். உங்கள் வழிகாட்டுதலின் படி செய்ததில் சுவையாக இருந்தது.
நன்றி
சுந்தர் மதுரை

Cool Krish said...

கொடுமை என்னான்னா எந்த சமையல் குறிப்பாக இருந்தாலும் அதை ஆம்பளைகள் தான் செய்து விமர்சனம் செய்கிறார்கள்.... கடவுளே அப்போ பெண்டிர் எல்லாம் வேலைக்கு செல்கிறார்கள் போல....

Related Posts with Thumbnails