Monday, September 22, 2008

கொண்டைக்கடலை குருமா

தேவையானவை

கொண்டைக்கடலை - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 (optional) (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு
எண்ணெய்

வறுத்து பொடிக்க:

கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 4 அல்லது 5 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
பாதாம் - 4
முந்திரி - 10

எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.

செய்முறை

  • கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

  • சிறிது தண்ணீர் விட்டு உருளைகிழங்கை வேக விடவும்.

  • பிறகு கொண்டைக்கடலை சேர்த்து, அரைத்த பொடி , மிளகாய்த்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


  • மல்லித்தளை சேர்த்து எடுத்து வைக்கவும்.




பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன் சப்பிடலாம்.

4 பேர் ருசி பாத்துட்டாங்க:

ஆயில்யன் said...

குறிப்பிட்டிருக்கிற எல்லா சமையல் பொருட்களுமே இங்க கிடைக்கிறதால இந்த வாரம் லேப்ல இதை செஞ்சு பார்த்துடவேண்டியதுதான்!

தாங்க்ஸ்க்கா! :)

தெய்வசுகந்தி said...

உங்க லேப்ல செஞ்சு போட்டோ போடுங்க. நீங்க தேறுவீங்களான்னு (சமையல்ல) பாத்து சொல்லறேன்.
:)))))))))))))

sury siva said...

துளசி தளம் வலைக்கு வந்து பூவெல்லாம் என்னம்மா அழகா மணமா இருக்குன்னு மெய்மறந்து
நிக்கறப்போ இன்னொரு மணம் அப்படியே மூக்கைத் துளைக்கிறது.

அது என்ன மணம்னு வந்து பார்த்தால் தெரிகிறது கொண்டகடலை குருமா.

இப்பதான் முதல் தடவையா உங்க வலைப்பதிவுக்கே வருகிறோம். வந்த உடனேயே குருமா
நல்லா இருக்கேன்னு சொன்னா நீங்களும் கண்டிப்பா இரண்டு கரண்டி
தருவீங்கன்னு நினைக்கிறோம்.

ந்யூ ஜெர்ஸி யா ! ரொம்பவே செளகரியமா போச்சு !
அங்க தானே மாசக்கடைசிலே வரோம்.

சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com

Anonymous said...

Looks so good. I am sure going to try. Thanks.

Radha

Related Posts with Thumbnails